நாபீர் பௌண்டேசனில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் : முக்கிய புள்ளிகள்

எஸ்.அஷ்ரப்கான்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயற்பட்ட சம்மாந்துறை பிரதேச ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அக்கட்சி மீது அதிருப்தியுற்று நாபீர் பௌண்டேஷனில் அண்மையில் இணைந்து கொண்டனர்.

இவ்வாறு பலரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து படிப்படியாக வெளியேறி வருகின்றனர்.

அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளர்கள் நாபீர் பௌண்டேஷன் தலைவரும் பொறியியலாளருமானயூ.கே.நாபீருடன் இணைந்து தமது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், இதுகாலவரை சம்மாந்துறை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கட்டி வைத்திருந்த கட்டமைப்பு சரிவை சந்திக்கின்ற அதேவேளை அம்பாரை மாவட்டமெங்குமுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது கட்சிகளிலும் கட்சியின் தலைமைகளிலும் அதிருப்தியுற்ற நிலையில் நாபீர் பௌண்டேஷனில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் இந்நிலை தொடருமானால் இவ்விரு பிரதான கட்சிகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வாக்கு வங்கியில் பாரிய வீழ்ச்சியினை கொண்டுவரும் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பல வருடகாலமாக குறித்த நாபீர் பௌண்டேசன் மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் தனது சேவைகளை செய்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனது சமூக சேவையை விஸ்தரித்து வருகின்றது. இந்நிலையில் மக்களின் ஆதரவு இவ்வமைப்பிற்கு பெருகி வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது. 

இதனால் தமது மக்களின் ஏகோபித்த முடிவின்பேரில் எதிர்வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் முதல் முறையாக கால்பதிக்கும் நாபீர் பௌண்டேசனில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் இரு பிரதான கட்சிகளில் அதிருப்தியுற்றுள்ள முக்கிய புள்ளிகள் என்றும் இதனால் அத்தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் பெரும் சவாலை எதிர்கொள்ளும் எனவும் நாபீர் பௌண்டேசனின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -