உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்படுவதால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுக்கும் எல்லை நிர்ணய குழுவிற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எல்லை மீள்நிர்ணய அறிக்கையானது நேற்று முன்தினம் உள்ளூராட்சி அமைச்சில் கையளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதும் குறித்த அறிக்கை கையளிக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் நேற்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எல்லை மீள்நிர்ணய அறிக்கையானது ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் அது ஏப்ரம் 30ஆம் திகதி, ஓகஸ்ட் 31ஆம் திகதி, ஒக்டோபர் 31ஆம் திகதி, நவம்பர் 30ஆம் திகதி, டிசம்பர் 15ஆம் திகதி என தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வந்த நிலையில் இறுதியாக நேற்று முன்தினம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், மொழிப்பெயர்ப்பை காரணம் காட்டி மீண்டும் அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடப்பட்டுள்ளமையானது தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கையாகுமென தெரிவித்துள்ள கீர்த்தி தென்னகோன் இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.