கிழக்கு சுகாதார அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய பயணம் நூல் வெளியீடு..!

அபு அலா - 
கிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய பயணமும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் 2016 ஆம் அண்டில் இடம்பெற்ற அபிவிருத்திகள் பற்றிய பதிவுகள், சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் ஆயுர்வேதா நூல் வெளியீடும் நேற்று (26) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உமாலெப்பை, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர், ஜே.உசைனுதீன், கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் பிர்னாஸ் இஸ்மாயில், கிழக்கு மாகாண சுதேச தினைக்களத்தின் ஆணையாளர் ஆர். ஸ்ரீதர், சுகாதார அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் யு.எம்.வாஹிட் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது கடந்த சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக வேண்டி 2 நிமிட அஞ்சலியுடன் விஸேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தி வைக்கப்பட்டது. 

மேலும் குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாராட்டி சன்றிதழ்களை இந்நிகழ்வின் பிரதம அதிதி சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினாலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.​














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -