புயலின் மையப் பகுதி சென்னை துறைமுகம் அருகே கடந்தது

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்ட வார்தா புயல் நண்பகல் 12 மணிக்கு சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது.

இந்நிலையில் புயலின் மையப் பகுதி 3 மணிக்கு கரையை கடக்கத் துவங்கியது.

அதிதீவிர வார்தா புயலின் மேற்குப் பகுதி சென்னை அருகே கரையை கடந்துவிட்டது. புயலின் மையப்பகுதி 3 மணிக்கு துவங்கி 4 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையை கடந்தது.

வார்தா புயலின் கிழக்கு பகுதி தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மரக்காணம் வரை காற்றின் வேகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.30 மணியளவில் அதிதீவிரம், தீவிர நிலையில் இருந்து புயலாக குறையும். இரவு 11.30 மணிக்கு அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறையும்.

புயல் கரையை கடந்தாலும் இரவு 7 மணி வரை அதன் தாக்கம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.மாம

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -