எந்த அரச அதிகாரியும் முச்சக்கர வண்டி சாரதிகளையோ அல்லது உரிமையாளர்களையோ அச்சுறுத்துவதையோ அசிரத்தைக்குள்ளாக்குவதையோ நான் ஊரு போதும் விரும்பவில்லை. இதனை நான் அனுமதிக்கவும் மாட்டேன் அவ்வாறு அதிகாரிகள் நடந்து கொள்ள முனையவும் கூடாது, இவ்வாறு நாதாந்த கொள்ளும் அதிகாரிகளை நான் கண்டிப்பதோடு இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் 6 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் கலந்து கொண்டதுடன், அவர்கள் எதிகொள்ளும் பல தரப்பட்ட பிரச்சசினைகள் தொடர்பாக அமைச்சரிடம் முறையிட்டனர்.
அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு உள்ள பிரச்சசினைகளை அரசியலுக்கு அப்பால் இருந்து தீர்க்க வேண்டும். எமது அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளோராட்சி மன்றங்களின் ஊடாக இதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுகிறது, நாங்கள் கதைப்பதை விட செயலில் இறங்குவதே மேல். எனவே முச்சக்கர வண்டி சங்கங்களை ஒனறிகணைத்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் சிறந்தது. முச்சக்கரவண்டி தொடர்பான சகல பிரச்சசினைகளையும் ஆராய்வதுடன் மாத்திரம் நின்று விடாமல் இதற்கான எதிர்கால தீர்வுகள் என்ன என்பது பற்றியும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவுடனும் கலந்தாலோசிக்க உள்ளேன். எனவே முச்சக்கர வண்டி சாரதிகளும் உரிமையாளர்களும் இவ்விடயத்தில் சலசலனங்களை ஏட்படுத்திக்கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.
எனவே முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தங்கள் கடமைகளை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்ற வேண்டும். மக்களது பாது காப்பு தொடர்பில் மிகவும் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்ள வேண்டும் , குறிப்பாக பயனாளிகளுக்கு வீண் சிரமங்களை ஏட்படுத்ததா வகையில் அவர்களுடன் மிகவும் அந்நியோன்னமாக நடந்து கொள்ள வேண்டும் இதனையே மக்களும் எதிர்பார்த்து நிற்கினர் என்கிறார்.
இக்கலந்துரையாடலில் பொது அடுத்த வருடம் முதல் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம், வாழ்க்கை காப்புறுதி, வங்கி கடனுதவி, குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுய தொழில் முயட்சிகளுக்கான ஊக்குவிப்பு ஆகியன பற்றி விரிவாக ஆராய பட்டதுடன் இது தொடர்பில் அமைச்சரும் கோவத்தில் எடுத்து செயற்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை தொழில் சார் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காணவும், பாதுகாப்பு கருதியும் தரமான அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை எதிர்காலத்தில் வழங்கவும் ஆல் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அட்டைகளை வழங்கவும் இதன் பொது தீர்மானிக்கப்பட்டது.