எம்.ரீ.ஹைதர் அலி-
பிராந்திய மலேரியா தடுப்பு அதிகாரி மற்றும் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுத்த வேண்டுகோளிற்கமைவாக காத்தான்குடி தக்வா நகர், பிர்தௌஸ் நகர், அன்வர் நகர், அப்றார் நகர் மற்றும் ஆற்றங்கரை பிரதேச பகுதிகளை உள்ளடக்கியதாக நுளம்புகள் அதிகம் காணப்படும் பல்வேறு பிரதேசங்களில் 2016.12.29ஆந்திகதி - வியாழக்கிழமை (நாளை) சுகாதார வைத்திய அதிகாரிகளால் நுளம்புகளை அழிப்பதற்கான புகையிடல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் நாளை மாலை 4.00 மணிக்கு இப்புகையிடும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதோடு, இதன்போது பொதுமக்கள் தங்களது வீட்டு கதவு மற்றும் ஜன்னல்கள் போன்றவற்றை திறந்து வைக்குமாறும் புகையிடும் அதிகாரிகளிடம் தங்களது வீட்டு வளாகங்களிலும் புகையிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதனால் நுளம்புகளினால் ஏற்படும் அபாயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சிறுவர்கள் அடிக்கடி காய்ச்சல் போன்ற நோய்களுக்குள்ளாவதாகவும் இப்பகுதிகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிராந்திய மலேரியா தடுப்பு அதிகாரி மற்றும் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே குறித்த புகையிடல் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.