எஸ்.எல்.அப்துல் அஸீஸ்-
அம்பாறை மாவட்ட சமூக நல்லினக்க அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கனேசன் அகியோர்களுக்கிடையிலான சந்திப்பும்,கலந்துரையாடலும் நேற்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் அம்பாறை மாவட்ட பிரதேசம்களில் சகவாழ்வுக்கு தடையாக காணப்படுகின்ற காணி,பிரதேச எல்லைகள் மற்றும் மக்களுக்கிடையான நல்லினக்க முரண்பாடு தொடர்பான விடயம்கள் கலந்தாலோசிக்கப்படடன.
சமாதானமும் சமுகப்பணிக்குமான அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரி.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச மட்ட நல்லினக்க சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சமாதானமும் சமுகப்பணிக்குமான அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.