அக்கரைப்பற்று அல் ஹிதாயா வித்தியாலயத்தைக் காக்க அணி திரள்வோம்..!

1907 ம்மாண்டு ஆரம்பிக்கப்பட்ட றோமன் கத்தோலிக மிசன் பாடசாலை பின்னாளில் அல் ஹிதாயா வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது. பல சாதனைகளை யும் கல்வியிலாளர்களையும் உருவாக்கி அக்கரைப்பற்றில் மிகப் பெரிய அறிவியல் பொக்கிஷமாக விளங்கிய அக்கரைப்பற்று அல் ஹிதாயா வித்தியாலயத்தின் தரம் 6 மேற்பட்ட பிரிவை மூடுவதற்கு வலயக் கல்வி பணிப்பாளர் நடவடிக்கை மேற் கொள்வதாக அறிய முடிகிறது.

மூடுவதற்க்கான காரணங்களை முன் மொழிவதற்கு முன் இப் பாடசாலை வரலாற்றில் எவ்வாறான சிறப்பம்சங்களை கொண்டது. அக்கரைப்பற்றின் இன்று இருக்கின்ற மூத்த கல்வியிலாளர்களை உருவாக்கியது. புலமை பரிசில் போட்டி பரிட்சையில் ஒரு காலத்தில் அல் ஹிதாயாவுக்கு போட்டியாக எந்த பாடசாலையும் இருந்ததில்லை. இங்கு அகில இலங்கை ரீதியில் சித்தியெய்தி மாணவர்கள் ஜப்பான் வரைக்கும் சென்று வந்திருக்கிறார்கள்.

இன வன்முறைகள் இடம் பெற்ற காலப்பகுதியில் கூட இந்த பாடசாலை அல் முனவ்வறா வித்தியாலயத்தில் தற்காலிகமாக கூடாரமைத்து இயங்கிய பாடசாலை ஆகும்.

இன்று அந்த பாடசாலைக்குரிய வளங்களை நிவர்த்தி செய்யாமல் எல்லா வளங்களையும் குறிப்பிட்ட ஒரு சில பாடசாலைகளுக்கு குவித்து விட்டு அதிபர்கள் ஆசிரியர்கள் முறையிட்டால் பாடசாலை தரத்தை குறைக்கின்ற வலயக் கல்வி பணிப்பாளரின் குறித்த செயற்பாடுகள் மாற்றம் காண வேண்டும்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் பொற்றோர் நலன் விரும்பிகள் பிரதேச மக்கள் எல்லோரும் ஒன்றித்து பாடசாலை தொடர்பில் விழிப்பாக நடந்து கொள்வோம். பாடசாலைக்கு வரையறுக்கப்பட்ட பிரதேச மாணவர்கள் ஏனைய பாடசாலைகளுக்கு ஆட் சேர்ப்பது தொடர்பில் மிக அவசரமாக அல் ஹிதாயா வித்தியாலயத்துக்கு தேவையான வளங்களையும் ஆசிரியர்களையும் பெற வலயக் கல்வி பணிப்பாளரிடம் வேண்டி நிற்போம்.

பாடசாலை யின் வளர்ச்சி தொடர்பில் பாடசாலையில் கற்ற பழைய மாணவர்கள் பொற்றோர் பிரதேச மக்களிடம் வினவ வேண்டுமே ஒழிய வீணாக யாரையோ அழைத்து தீர்மானம் நிறைவேற்றுவதை கண்டிக்கிறோம்.

அல் ஹிதாயாவை தரமிறக்காதே!!!!!

அல் ஹிதாயாவுக்கு வளங்களை வழங்கு! !!!!!!!

பழைய மாணவர்கள் ஒன்றியம்
தொடர்பு .....U.F.H.HILMY (Bsc ) 0772696820
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -