NFGGனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டம்கடந்த சில நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மூன்றுதினங்களில் இவ்வாறான ஆறு நிகழ்வுகளை காத்தான்குடிப் பிரதேசத்தில்NFGGநடாத்தியுள்ளது. அதில் 1500 க்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
'மாணவர்களின் கல்வி முன்னேற்றம், அவர்களின் எதிர்கால வெற்றி, அது தொடர்பில்பெற்றோர்களின் கடமைகளும் பொறுப்புகளும்' என்ற தலைப்புக்களில்பெற்றோர்களுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றபணியினையும் இந்த நிகழ்வுகளின் ஊடாக NFGG மேற்கொண்டு வருகின்றது.
இந் நிகழ்வுகளில் ஆற்றப்பட்ட விசேட உரைகளின் போதே NFGG யின் தவிசாளர்பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"கடந்த காலங்களைப் போலன்றி, கல்வி பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் மிகஅதிகமாக காணப்படுகின்றது. தமது பிள்ளைகளை எவ்வாறாவது படிப்பித்துவெற்றியடையச் செய்து விட வேண்டும் என்பதில் ஒவ்வொரு பெற்றோரும் மிகக்கவனமாகவும் அக்கறையாகவும் இருக்கின்றனர்.
பரீட்சைப் போட்டிகளும் தொழில் போட்டிகளும் அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில்தமது பிள்ளைகளை கல்வியில் வேகமாக முன்னேற்றி விட வேண்டும் என்பதற்காகபலவாறான முயற்சிகளையும் பெற்றோர்கள் மேற்கொள்கின்றனர். சில வேளைகளில்பிள்ளைகள் பரீட்சைகளில் குறிப்பிட்ட அடைவு மட்டத்தை பெறுவதென்பது தமதுகௌரவப் பிரச்சினையாகவும் பெற்றோர்கள் பார்க்கத் தொடங்குகின்றனர். ஐந்தாம்ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
ஓடித்திரிந்து, விளையாடி, ஓய்வுகளை அனுபவித்து , அதனோடு சேர்த்து கல்வியும்கற்க வேண்டிய அந்த சிறுவயதுப் பிள்ளைகளின் தலையின் மீது அளவுக்கதிகமானசுமை திணிக்கப்படுகிறது. இறுதியில், கொஞ்சம் கொஞ்சமாக கல்வி மீதானஆர்வத்தையும் விருப்பத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அந்த மாணவர்கள்மனதில் கல்வி என்பது ஒரு சுமையாகவும் வெறுப்புக்கும் பயத்திற்றும் உரியஒன்றாகவும் மாறிவிடுகின்றது.
எனவே, பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் தமக்கிருக்கும்அக்கறையினை எப்படி வெளிப்படுத்துவது என்பது பற்றி மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
முதலில் அனாவசியமான அழுத்தங்களையும் திணிப்புக்களையும் கைவிட வேண்டும்.அதற்குப் பதிலாக கற்றல் நடவடிக்கைகளில் அவர்களுக்கு விருப்பத்தைஏற்படுத்தக்கூடிய ஆர்வமூட்டும் நடவடிக்கைகளை எல்லா வகைகளிலும்செய்யவேண்டும். அடுத்ததாக, பரீட்சைகள் பற்றிய பயத்தைப் போக்க வேண்டும்.
தன்னம்பிக்கையினை மெல்ல மெல்ல வளர்க்க வேண்டும். எந்த எந்தப் பாடங்களில்அவர்கள் பலவீனமாக இருக்கின்றார்களோ அந்தந்தப் பாடங்களை மேலும் மேலும்சுமையாக்கிவிடாமல் இலகு படுத்திக் கொடுக்க வேண்டும். மாணவர்களின்ஒவ்வொரு வயதுக்குமான உளவியலை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.கல்வியில் செலவழிக்கும் நேரம் போலவே ஓய்வுகளிலும் ஏனைய விளையாட்டுநடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுவதற்கு நாமாகவே நேரத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும்.
ஒரு மனிதனுடைய எல்லாவகையான முன்னேற்றங்களும் வெற்றிகளும் அவனதுஉளவியல் வளர்ச்சியிலும் அதன் காரணமாக ஏற்படுத்தப்படும் தன்னம்பிக்கைமற்றும் ஆழுமை வளர்ச்சியிலும்தான் தங்கியிருக்கிறது என்பதை பெற்றோர்கள்மறந்து விடக்கூடாது.
வீட்டில் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய பொருத்தமான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது என்பது மிக அடிப்படையான கடமையாகும். ஏனைய எல்லா வசதிகளும்கொண்ட வீடுகளில் கூட பிள்ளைகள் படிப்பதற்கான தனியான வசிதிகள்இல்லாதிருப்பதை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன்.
அத்தோடு அடுத்த மாணவர்களோடு ஒப்பிட்டு உங்களது பிள்ளையினை நோக்காமல்நீங்கள் அவர்களை தனித்தனியாக கையாளவேண்டும். ஏனெனில்ஒவ்வொருவருடைய ஆளுமையும் ஆற்றலும் தனித்தனியாக வேறுபட்டது. அந்தஇயற்கை யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே பிள்ளைகளை கல்வியில்முறையாக முன்னேற்ற முடியும்.
எனவே, அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிட்டு உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஊட்டுகின்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களின் கல்வியில் வெற்றியடைய செய்ய வேண்டும்."