எஸ்.எம்.சன்சீர்
வரிப்பத்தான்சேனை மாதர் அபிவிருத்தி சங்கம்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவருமான கௌரவ MIM மன்சூர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வாழ்வாதார பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது .
இவ் நிகழ்வு இறக்காம பிரதேச செயலாளர் MM நஸீர் தலைமயில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. இதன் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் MIM மன்சூர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தவுடன் முன்னாள் பிரேதேச சபை உறுப்பினர் நசீர் முஹம்மத் ஆசிக் அவர்களும் முன்னாள் தவிசாளற் MI நய்சார் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் UL ஆஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.