வட மத்திய மாகாண ஆசிரியர் பதவி ஆட்சேர்ப்பில் சமூகப் பணி டிப்ளோமாதாரிகள் புறக்கணிப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம் கிண்ணியா-


ட மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் ஆசிரியர் ஆட்சேர்ப்பிற்கு கோரப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான வெற்றிடம் தொடர்பாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

 இதில் சமூகப் பணி டிப்ளோமாதாரிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொழில் வாண்மையான சமூகப் பணியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இவ் ஆசிரியர் சேவைக்காக இசை நடனம் மற்றும் சுகாதாரம் போன்ற பாடங்களுக்கு விளையாட்டு விஞ்ஞானம் இசைத் துறையில் டிப்ளோமா தகைமைகளாக கோரப்பட்டும் இரண்டு வருட சமூகப் பணி உயர் டிப்ளோமா புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சமூக சேவைகள், நலன்புரி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் மூலமாக முழு நேர பாடநெறியாக சமூகப் பணி உயர் டிப்ளோமா இருவருடங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பாடநெறிகளுக்கு எந்த வித பதவிகளும் தகைமைகளாக ஆட்சேர்ப்பில் சேர்க்கப்படுவதில்லை எனவும் இவ்விடயம் தொடர்பாக வடமத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு கவனத்திற் கொண்டு குறிப்பிட்ட துறை தொடர்பான பாடநெறிக்கு தகைமைகளாக சேர்க்க வேண்டுமெனவும்கோரிக்கை விடுக்கின்றனர்.

இது போன்று கிழக்கு மாகாண சபையின் ஊடான பதவிகளுக்காக விவசாய டிப்ளோமா குடியேற்ற உத்தியோகத்தர் பதவிக்கும்,விளையாட்டு விஞ்ஞான டிப்ளோமா விளையாட்டு உத்தியோகத்தர் பதவிக்கும் கோரப்படும் அதேநேரம் சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்கு மாத்திரம் ஏன் இத்துறை தொடர்பான சமூகப் பணி டிப்ளோமா தகைமைகளாக சேர்க்கப்படுவதில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறதுஇனி வரும் காலங்களிலாவது இத் துறை தொடர்பான பாடநெறிகளையும் கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கவனம் எடுக்குமாறும் கோரிக்கையை முன் வைக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -