இலங்கை – மலேசியா கல்வித்துறை உறவை மேம்படுத்த இருதரப்பு பேச்சு..!

லங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வது தொடர்பாக மலேசியாவின் “International University of Malaya – Wales ” மற்றும் “Vision College” ஆகிய பல்கலைகழகங்கள் “மட்டக்களப்பு கெம்பஸ்” தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது. 

இன்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் “International University of Malaya – Wales ” பணிப்பாளர் ஆந்தோனி மைக்கல் மற்றும் “Vision College” நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆண்ரியன் தோன்ங்; உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். . 

இதன் போது, இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வதற்கு இவ்விரு பல்கலைகழகங்களும் விருப்பம் தெரிவித்ததுடன், மட்டக்களப்பு கெம்பஸ{டன் துறைசார்ந்த உறவுகளை பேணுவது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -