பாறுக் ஷிஹான்-
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் தொடர்பில் தற்போதும் புதியதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அத்தகைய அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தே இல்லாமல் செய்ய வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் காலை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்புக்களை மேற்கொண்ட பொலிஸாருக்கும் அதிகளவான குற்றங்களை கட்டுப்படுத்த உதவிய பொலிஸ் உத்தியோ கத்தர்களுக்கும் பரிசளிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்படி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இங்கு அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
வடமாகாணத்தில் கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கையானது அதிகளவாக இடம்பெறுகின்ற பகுதியாக காங்கேசன்துறை பகுதியே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த பகுதியில் திறமையாக கடமையாற்றுகின்ற பொலிஸார் இக் கடத்தல் முயற்சிகளை பெரும்பாலும் முறியடித்து விடுகின்றார்கள். இது வரவேற்கதக்க ஒன்றாகும்.
இத்தகைய கஞ்சா பாவனையானது இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இங்கே விற்கப்படுகின்றது. இவற்றினூடாக இவற்றுக்கு அதிகளவான இளைஞர்கள் அடிமையாகியுள்ளார்கள்.
இவற்றைவிட தற்போது இலங்கை மேலும் பாரிய போதைப்பொருள் கடத்தலுக்குள் சிக்கி யுள்ள அபாயத்தை அடைந்துள்ளது.
அதாவது கொக்கையின் போதைப் பொருள் கடத்தல் நட வடிக்கையானது இலங்கைக்கு ஊடாக அதிகரித்துள்ளது. இரு்ந்த போதிலும் அந்தக் கடத்தல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.
கொக்கையினானது கேரள கஞ்சாவினை விடவும் அதிக மடங்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும். அத்துடன் இக் கொக்கையினானது வடக்கு மாகணத்திற்கும் பரவிடக் கூடிய சாதகமான நிலைமையை நாம் ஏற்படுத்தாத வகையில் செயற்பட வேண்டும்.
அவ்வாறு செயற்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறாயின் அதனை சாத்தியமாக்க முடியும்.
மேலும் தற்போது அதிகளவான போதை கடத்தல்களை முறியடித்த பொலிஸ் உத்தியோ கத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சன்மானமும் கௌரவமும் ஏனைய பொலிஸ் உத்தியோக த்தர்களையும் இவர்கள் போன்று செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை துண்டுவத ற்காகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.