க.கிஷாந்தன்-
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் 25.12.2016 அன்று மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நத்தார் பண்டிகையினை முன்னிட்டு பல கிறிஸத்தவ ஆலயங்களில் தெரிவு செய்யப்பட்ட ஏழை மக்களுக்கு உலர் உணவு பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் பங்கு தந்தை லெஸ்லி பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள நத்தார் பண்டிகையினை முன்னிட்டு அட்டன் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 150 குடும்பங்களுக்கு அரசி, பருப்பு, செமன், நூட்லிஸ், சீனி உட்பட உலர் உணவு பொதியொன்று 24.12.2016 அன்று பத்து மணியளவில் வழங்கப்பட்டன.
இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.
24.12.2016 அன்று நள்ளிரவு 12 மணியளவில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.