க.கிஷாந்தன்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் 24.12.2016 அன்று மாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோரால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் சுமார் 5 மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.
நீரேந்தும் பிரதேச காட்டுப்பகுதியில் இத்தீ ஏற்பட்டதன் காரணமாக நீருற்றுக்கள் அற்றுப் போகும் அபாயம் உருவாகியுள்ளன தற்போது நீர்த்தேக்கங்களின் நீர் மற்றும் குறைந்து வரும் நிலையில் மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாலாம் என எச்சரிககப்பட்டுள்ளது.
எனினும் நீர்தேக்களுக்கு அண்டிய பகுதியிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதனால் எதிர்காலத்தில் நீர் மட்டம் மிக வெகுவாக குறைந்து மின் உற்பத்தியனையும் பாதிக்க கூடும். அண்மைக்காலமாக வறட்சியான காலநிலையின் போது காட்டுப்பகுதியகளுக்கு தீ வைப்பது அதிகரித்துள்ளன. இது மிருகங்களை வேட்டையாடுவதற்கு இவ்வாறு தீ வைக்கப்படுவதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் காட்டுக்கு தீ வைத்து எமது எமக்கு உரித்தான இயற்கை சூழலினை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக்கூடாது. எனவே பொருப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சூழல் மீது அக்கறை கொண்டோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை – வோல்ட்றீம் பகுதியில் உள்ள வனப்பகுதி 24.12.2016 அன்று தீடிரென தீ பற்றியதால் சுமார் 5ற்கும் மேற்பட்ட ஏக்கர்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் 24.12.2016 அன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் ஓரளவு கட்டுப்படுத்த முடிந்ததாக லிந்துலை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.