கடவுச் சீட்டு இல்லாதவர்களும் யாழில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கலாம்..!

பாறுக் ஷிஹான்-
யாழில் இருந்து இந்தியாவிற்குச் செல்ல விரும்பும் யாத்திரிகர்களில் கடவுச் சீட்டு இல்லாதவர்களிற்கும் தற்காலிக கடவுச் சீட்டு உடனடியாக மேற்கொள்ள முடியும் என சிவசேனா அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தகவல்ல் தெரிவிக்கையில் ,

யாழில் இருந்து திருவாதிரையை முன்னிட்டு சிதம்பரத்திற்காக இந்தியாவிற் கப்பல் மூலம் காங்கேசன்துறையில் இருந்து பயணிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு இடம்பெறும் பயண ஏற்பாட்டில் செல்ல விரும்பும் யாத்திரிகர்களில் கடவுச் சீட்டு இல்லாதவர்களிற்கும் தற்காலிக கடவுச் சீட்டு உடனடியாக மேற்கொள்ள முடியும்.

குறித்த தற்காலிக கடவுச் சீட்டு ஏற்பாட்டிற்காக மாவட்டச் செயலக மேலதிக அரச அதிபருடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். எனவே இந்தியாவிற்கான யாத்திரை அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு யாத்திரை செல்ல விரும்புபவர்கள் கடவுச் சீட்டு உள்ளவர்களும் கடவுச் சீட்டு இல்லாதவர்களும் தொடர்பு கொள்ள முடியும். எமது இப் பயணத்திற்கான அனுமதி ஏற்பாடுகளை வட மாகாண ஆளுநர் மேற்கொண்டு வருகின்றார். எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -