கர்நாடகாவில் ஐடி ஊழியரான தனது கணவர், வீட்டில் பெண்களைப் போல நடந்து கொள்வதாக கூறி, தனக்கு விவாகரத்து வழங்க இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்தவர் அனிதா(29). இவரது கணவர் நவீன். இவர் பேனர்கட்டா சாலையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர்களது திருமணம் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணமாகும். இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்நிலையில் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ விரும்புவதாக இந்திரா நகர் காவல் நிலையத்தில் இளம்பெண் அனிதா புகார் அளித்துள்ளார்.
புகாரில் அனிதா கூறியுள்ளதாவது: எங்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையே தாம்பத்திய உறவு கிடையாது. ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் எனது கணவர், பெண்களைப் போல் நடந்து கொள்கிறார். முதலிரவு அன்று கூட அவர் புடவை அணிந்து கொள்வதற்குதான் விரும்பினார்.
பகல் நேரத்தில் வேலைக்கு செல்லும் அவர் மாலை வீட்டிற்கு வந்தவுடன் புடவை அணிந்து, அலங்காரம் செய்து கொண்டு பெண்ணாக மாறிவிடுகிறார். அவர் ஓரினச் சேர்கையையே விரும்புகிறார். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தம்பதிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. ஆனால் ஆண்மை தன்மை இல்லாத கணவருடன் வாழ விரும்பவில்லை என அனிதா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதேபோல் மறுப்பு எதுவும் கூறாமல் மனைவியை பிரிவதற்கு கணவர் நவீனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.