எமது நாட்டில் எமது சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும்





இக்பால் அலி-

மது நாட்டில் எமது சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும். நாங்கள் மற்றவர்கள் எம்மைப் பார்த்து பொறாமை கொள்ளவும், எம்மை அறியாமல் அவர்களை சில சீண்டும் விடயங்களில் ஈடுபட்டோம். தற்போது எமது சமுதாயத்திற்கு எதிராக எமது மனதைப் புண்படுத்தும் வகையில் விசக் கருத்துக்களையும், ஸ்டிகர்களையும், அத்துமீறல்களையும் செய்து வருகின்றார்கள். இதற்கு முன்னர் நாங்கள் எமது முச்சக்கர வண்டிகளில் அரபு நாட்டினுடைய தேசிய சின்னங்களையும் பதாதைகளையும் முச்சக்கர வண்டிகளில் ஒட்டிக் கொண்டு திரிந்தோம். ஆனால் அவர்கள் இவற்றைக் அர்த்தம் புரியாமல் குறையாகப் பார்ப்பதற்கோ எம்மைப் பற்றிச் சந்தேகம் கொள்ளுமளவுக்கு நடப்பதற்கோ நாங்களோ காரணமாக இருந்திருக்கின்றோம். சில தவறுகளுக்கு நாங்களே காரணமாக இருந்திருக்கின்றோம். எமது சமுதாயத்திற்கு எதிரான இயக்கதினர் மிக மிக சொற்பமானவர்கேள உள்ளனர். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் புள்ளிவிபரங்கள் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளன. இந்த நாட்டில் பெரும்பான்மையின சிங்கள மக்கள் அவர்களை அங்கீகரிக்க வில்லை. எனினும் எமக்கு எதிரான இயக்கத்தினர்; சமூக வலைத்தலங்களிலும் முகப்புத்தகங்களிலும பிழையாக விமர்ச்சித்து உசுப்பேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் எமது முஸ்லிம் இளைஞர்கள் அவர்களை விமர்சித்து கருத்துக்கள் இடுவதை நாங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் திருந்தக் கூடிய நல்ல சூழல் உருவாகும். எமது குர்ஆனில் இன்னொரு மதத்தை நிந்தனை செய்யுமாறு எந்த இடத்திலும் கூறவில்லை.

 இதற்கு நாங்கள் மாற்றமாக நடக்க முடியாது. அவர்களுடைய கருத்திற்கு எமது பதில் கருத்திற்களைப் பதிவு செய்யும் பட்சத்தில் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமே தவிர ஒரு போதும் பிரச்சினை தீரப் போவதில்லை. நாங்கள் கோழைகள் அல்ல. ஆனால் எமக்கு அறிவையும் புத்தியையும் தந்திருக்கின்றான். நாங்கள் விளங்கி நடக்க வேண்டும். இந்த சமூக வலைத்தலம் மற்றும் முகப்புத்தகம் நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். சமூகத்திற்கு அழிவுகளை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்தலிப் ஹாஜியார் தெரிவித்தார்.

தெல்தோட்டை வனஹப்புவ கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு வைபவம் மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்வு வனஹப்பு ஜும்ஆப் பள்ளிவாசல் முற்றத்தில் முன்னாள் அல் ஹிதாயா பாடசாலை அதிபர் நாகூர் உம்மா தலைமையில் 12-12-2016 நடைபெற்றது. இப்பிரதேசத்தில் பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரி, அரபுக் கல்லூரிகளில் ஆகியவற்றுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முத்தலிப் ஹாஜியார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

கண்டி மாவட்டத்தில் எம்மால் கடந்த ஒரு வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்விப் பணியானது எமது மாணவர் சமுதாயத்திற்குப் பொருத்தப்பாடுடையதாக ஐயத்திற்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளத்தக்கவை. வனஹப்புவ பிரதேசத்தில் எனது சமூக அபிவிருத்தி அமைப்பினால் முன்னெடுக்கப்டட கல்விப் பணியை இந்தப் பாடசாலையிலுள்ள பிள்ளைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஊடாக ஐயத்திற்கிடமின்றி அறிந்து கொள்ளலாம். மனம் திருப்தி கொள்ளுமளவுக்கு கண்டி மாவட்டம் முழுவதும் எமது கல்விப் பணி பரிணமித்து இருக்கின்றன.

எமது பெற்றோர்கள் பிள்ளைகளைப் பராமரிக்கும் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தம் பிள்ளைகளின் அஹதிய்யா கற்கை நெறிக்கு மாதக்கணக்கில் கட்டணங்கள் செலுத்தாமல் எமது பெற்றோர்கள் மத்தியில் இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் பண்ணுவதற்கு 100 ரூபா காசு கேட்டால் கொடுத்துவிடுவார்கள். கல்வித் துறைக்கு அக்கறை காட்டுவதை விட வீண் விரையத்திற்கே அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.

 துரதிருஷ்டமாக இன்னமும் எமது பெற்றோர்கள் கல்வி தொடர்பாக அக்கறையில்லாமல் இருப்பது கவலை தரும் விடயமாகும். எனினும் இந்தப் பிரதேசத்தைப் பார்க்கின்ற போது மனதிற்குச் சந்தோசமாக இருக்கிறது. இங்குள்ள பெற்றோர்கள் அனைவரும் கல்விக்காக ஒன்று பட்டு எடுத்துள்ள பெரிய முயற்சியை ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்க வேண்டும். இது ஒரு சிறந்த முயற்சியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் டி. எம். தவ்பீக், வைத்திய அதிகாரி ஹைருன் நிசா, உலமாக்கள், கல்வியலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -