அம்பாறை: மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கும் கணவன் 'வீடியோவால்' பரபரப்பு

பாறுக் ஷிஹான்
னது மனைவியை தெருவில் வைத்து விரட்டி விரட்டி தாக்கி குழந்தையினையும் கதிரையினால் தாக்கும் மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அம்பாறை அக்கரைப்பற்று பகுதியில் மது போதையில் உள்ள ஆண் தனது மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதவாது:-

அயல்வீட்டு பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் அழைத்துள்ளதுடன் ஏதோ ஒரு காரணத்தை கூறி அடித்துள்ளார். இதனால் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை அருகில் உள்ள பெண்கள் சிலர் காப்பாற்ற முயன்ற போதிலும் பயனளிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசாருக்கும் அப்பகுதி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கும் அறிவிக்கபட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என தெரிவிபக்கப்படுகின்றது.

தற்போது சமூக வலைத்தளங்களில் தாக்குதலில் ஈடுபடும் குடிகார ஆணுக்கு சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக பிரிவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தகவல்கள் பகிரப்பட்டு வரகின்றது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -