எம்.எம்.ஜபீர்-
சிறுபான்மை மக்களாகிய தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள் இன்று தமிழ் முஸ்லிம் மக்களை நசுக்குவதற்கு முயற்சிக்கிறனர் இதற்கெல்லாம் அதிகாரத்தை வழங்கியது இந்ந சிறுபான்மை மக்கள் தான் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.
இறக்காமம் ஜீ.சீ.எம்.கின்டகறடன் பாலர் பாடசாலை மாணவர்களின் 4ஆவது ஆண்டு விடுகை விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தர்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த காலகட்டத்தில் அமைதியான சூழ் நிலையிலே சமாதானமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மக்கள் மத்தியிலே சில விசமிகள் வேண்டும் என்ற சில முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த சமாதானத்தினை குலைப்பதற்கு முயற்சிப்பவர்கள் விடயத்தில் குறிப்பாக தாய்மார்கள் அவதானமாக இருக்க வேண்டும் இவ்வளவு காலமும் ஆயுதமேந்தி போராடிய தமிழ் சமூகம் ஆட்சியில் பங்காளராக இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி நடைபெறுகின்ற இதேவேளை நாட்டிலே சிறுபான்மை இனங்களால் ஆட்சி மாற்றம் எற்படுத்தப்பட்டு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்வு ஜீ.சீ.எம்.கின்டகறடன் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.என்.எம்.றிஸான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.நயிஸர், முன்னாள் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர், எம்.எல்.முஸ்மி, யூ.எல்.ஜிப்ரி, இறக்காமம் இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.எல்.றுஸ்பான், அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலை வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.எம்.றிஸான், ஜீ.சீ.எம்.கின்டகறடன் பாலர் பாடசாலையின் ஆலோசகரும் பிரதி அதிபருமான ஏ.எஸ்.அயாத்வாவா, மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.