கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேசத்தில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் முழுநேர கருத்தரங்கு (21.12.2016) வாகரை எஸ்கோ கட்டிடத்தில் இடம்பெற்றது. இதனை Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பின் சார்பாக ச.கஜேந்தன், ந.நிமல்ராஜ், த.ரமணன், க.யூஜிதா மற்றும் Plan International SirLanka அமைப்பின் செயல்திட்ட உதவியாளர் ஜெ.எஸ்.ஜோதி ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் A.சதானந்தன் மற்றும் வாகரை VTA கணணி பயிற்றுவிப்பாளர் குகன்ராஜ் ஆகியோரும், தொழில்முயற்சி சேவை பணியக (ISB) நிகழ்ச்சி திட்டமிடல் முகாமையாளர் B.மாதவன், வெளிக்கள உத்தியோகத்தர் த.சதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு இக்கருத்தரங்கினை சிறந்த முறையில் வழிநடத்தினர்.
இக்கருத்தரங்கில் வாகரைப் பிரதேசத்தில் இருந்து 35 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு, தங்களது எதிர்கால நோக்கத்தினை வளப்படுத்தும் முறைகள் சம்பந்தமாக பூரணமான அறிவினைப் பெற்றுக்கொண்டனர். இக்கருத்தரங்கு எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாக இதில் பங்குகொண்ட அனைவரும் கூறியதோடு கருத்தரங்கு நிறைவில் தொழில்பயிற்சிக்கான வண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.