திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்ப கல்வி அபிவிருத்தியை விருத்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்கள்.
அதில் ஒரு கட்டமாக மூதூர் கல்வி வலயத்தில் ரூபா 500000.00 ற்கு பின்வரும் கற்பித்தல் உபகரணங்களை இன்று 2016.12.23 ம் திகதி மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வழங்கப்பட்ட பொருட்கள் சகல பாடசாலைகளுக்குமான உறுப்பமைய எழுதும் புத்தகம், மாதிரி வினாப்பத்திரங்கள், உறுப்பமைய எழுதிய பெனர் என்பன வழங்கப்பட்டது
இந்நிகழ்வின் போது கௌரவ பா.ம.உ அப்துல்லாஹ் மஃறூப் அவர்கள் உரையாற்றும் போது மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்,மன்சூர் அவர்களின் அன்மைக்கால கல்வி தொடர்பான முன்னெடுப்புகள் பாராட்டக் கூடியது என்று தெரிவித்ததுடன் சகல பாடசாலை அதிபர்களும் ஆரம்ப கல்வி அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்கின்ற போது பாரிய மாற்றத்தை காணலாம் என்றார்.
Rafeek sarraj