மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் - அன்வர் MPC

கிழக்கு மாகாண சபையின் மூன்றாவது நாள் வரவு செலவு (2017)திட்டத்தில் சுகாதார அமைச்சர் நசீர் அவர்கள் பாதீட்டை முன் வைத்து பேசினார். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் பேசுகையில்:-

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் பௌதீகவளம் மற்றும் ஆளணிகள் நிரப்படவேண்டும்.

குறிப்பாக புல்மோட்டை தள வைத்தியசாலைக்கான வைத்தியர்கள்,ஏனைய ஆளணிகள் அணைத்து பௌதீக வளங்களும் பகிர்ந்தளிக்க வேண்டிய ஒரு கட்டாயம் உள்ளது குறித்த வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினூடாக நோயாளிகளுக்கான புதிய கட்டிடங்கள் மற்றும் புல்மோட்டை பிரதேசத்திற்கான புதிய ஆயுர்வேத மத்திய மருந்தகம் மக்களினுடைய கஸ்ட நிலைமைகளை கருத்தில்கொண்டு அமைத்துத்தந்தமைக்கு நன்றி தெரிவிப்பதோடு, 

கிண்ணியா தள வைத்தியசாலை சுனாமியால் பாதிக்கப்பட்ட பின்னர் தற்காலிக கட்டிடமொன்றுக்கு நகர்த்தப்பட்டு பல நெருக்கடிக்கு மத்தியில் இயங்குவது பெரும் சவாலாக உள்ளது குறித்த வைத்தியசாலைக்கான பூரண திட்டவாக்கம் தயாரிக்கப்பட்டு உள்ளது எனவே அவற்றை உடனடியாக அமுல்ப்படுத்துவதுடன் அமைச்சர் ஆளணி பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யவேண்டும்.

மேலும் மூதூர் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் அதன் தரமுயர்வு ஆளணி பற்றாக்குறை விடயத்திலும். அமைச்சர் நிறைவு செய்யவேண்டும்.

அவ்வாறே தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை பௌதீக. வசதிகள் ஆளணிகள் நிரப்படவேண்டும் மற்றும் முள்ளிப்பொத்தானை கந்தலாவை மத்திய மருந்தகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குச்சவெளி பிரதேச வைத்தியசாலை, தோப்பூர் வைத்தியசாலை போன்றவற்றின் பௌதீக வளங்கள் ஆளணிகள் நிரப்படவேண்டும் அதற்கான வைத்தியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2017 ம் வருடம் சுகாதார அமைச்சிற்கு 333 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது கடந்த 2016 ம் வருட நிதி ஒதுக்கீட்டை பார்க்கும்போது 870 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது மில்லியன் 563 ரூபா குறைவாக உள்ளத்து எனினும் மத்திய சுகாதார அமைச்சினூடாக பல மில்லியம் ரூபா கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டது குறித்து நாம் மாகாணம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

எனவே அமைச்சர் அவர்களே மூவின மக்களும் சரிசமமான முறையில் எதிர்காலத்தில் எடுத்துச்செல்ல தாங்களும் தங்களது அதிகாரிகளும் எதிர்வரும் காலங்களின் மக்களின் தேவை அறிந்து பணிபுரிய வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -