07 மில்லியன் நிதியில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பொருட்கள் கையளிப்பு.!

சப்னி அஹமட், நுஸ்கி அஹமட்-
ரூபா 07 மில்லியன் நிதியில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பொருட்களை கையளிக்கும்நிகழ்வு இன்று (15) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அஸீஸ் தலைமையில் இட்ம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதி சுகாதார அமைச்சர் பைஷால் காசீம் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாணசுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நசீர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ மன்சூர், கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் ஐ.எல் மாஹீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் மன்சூர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் அலாவுத்தீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது வைத்தியசாலையின் மிகநீண்டகால தேவையான குறித்த வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவுக்கான தளபாடங்கள், கருவிகள், பற்சிகிச்சைக்கு தேவையன கருவிகளுடன் பொதுவாகவைத்தியசாலைக்கு தேவையான பொருட்கள் என்பன வழங்கி வைத்தியசாலையின் முக்கிய பிரச்சினைகள்தீர்க்கப்பட்டது.

வைத்தியசாலையின் மருந்தக களஞ்சிய சாலை கட்டிட பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டு அதற்காக புதிய கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான தீர்வு எட்டுப்பட்டதுடன், வைத்தியசாலையின் ஏனைய கட்டிடப்பிரச்சினைகள்தொடார்பகவும் தீர்வும் எட்டப்பட்டது.

மேலும், கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஏனைய 10 வைத்தியசாலைக்கு தேவையான பொருட்கள் அடங்கிய விபரங்களும் வைத்திய அத்தியட்சகர்களிடம் வழங்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -