09ஆம் திகதி MP ஆகிறார் ஹசன் அலி - அமைச்சர் ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹச­ன­லிக்கு தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யினை வழங்­கு­வ­தற்கு தான் தீர்­மா­னித்­துள்­ள­தாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

கட்­சியின் உயர்­பீடக் கூட்டம் நேற்று முன்தினம் திங்­கட்­கி­ழமை கொழும்­பி­லுள்ள தலை­மை­யகம் தாருஸ்­ஸ­லாமில் நடை­பெற்­றது. இதன்­போதே, அமைச்சர் ஹக்கீம் இந்த விட­யத்­தினைக் கூறினார். செய­லாளர் பதவி தொடர்பில் ஹச­ன­லி­யுடன் ஏற்­பட்ட பிரச்­சி­னையை சுமு­க­மாகத் தீர்த்­துள்­ள­தா­கவும், இதன் பொருட்டு ஹச­ன­லிக்கு தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யினை வழங்­கு­வ­தற்கு, தான் சம்­ம­தித்­த­தா­கவும் அவர் இதன்­போது குறிப்­பிட்டார்.

மேலும், ஹச­ன­லிக்கு தேசி­யப்­பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யினை வழங்­கு­வ­தாக, கடந்த பொதுத் தேர்தல் காலத்­தி­லேயே, நான் உறுதி வழங்­கி­யி­ருந்­தேன்.  கடந்த பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஹச­னலி விருப்பம் கொண்­டி­ருந்தார். ஆயினும் ஹச­ன­லியின் சொந்த ஊரான நிந்­த­வூரில், மு.கா. சார்­பாக பைசால் காசிம் போட்­டி­யி­ட­வி­ருந்தார். எனவே, ஹச­ன­லி­யிடம் தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டா­மென்று நான் கூறி­ய­தோடு, அவ­ருக்கு தேசி­யப்­பட்­டியல் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கு­வ­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தேன் என்றார்.

இதற்­கி­ணங்க, எதிர்­வரும் 09 ஆம் திகதி மு.கா. பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹச­னலி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகப் பத­வி­யேற்றுக் கொள்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மு.காங்­கி­ரசின் தேசி­யப்­பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜி­நாமா செய்யும் வெற்­றி­டத்­துக்கே, ஹச­னலி பத­வி­யேற்­க­வுள்ளார். இதே­வேளை, அட்­டா­ளைச்­சேனைப் பிர­தே­சத்­துக்கு தேசி­யப்­பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்க வேண்டும் என்­பதை அந்தப் பிர­தே­சத்தின் கட்சிப் பிர­மு­கர்­க­ளான எஸ்.எல்.எம். பளீல், சட்­டத்­த­ரணி எஸ்.எம்.ஏ. கபூர், யு.எல் வாஹிட், கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்­டா­ளைச்­சே­னை­பி­ர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் எம்.ஏ. அன்சில் மற்றும் முன்னாள் பிரதித் தவி­சாளர் ஏ.எல். நபீல் உள்­ளிட்டோர் வலி­யு­றுத்திப் பேசினர்.

"அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்­துக்கு தேசி­யப்­பட்­டியல் வழங்­குவேன் என்று மிகவும் பகி­ரங்­க­மாக கடந்த காலங்­களில் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளீர்கள். ஆனாலும் இப்­போது பொதுச் செய­லாளர் ஹச­ன­லிக்கு தேசி­யப்­பட்­டியல் வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தாகக் கூறு­கி­றீர்கள். அதற்குக் காரணம், நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்­கு­வ­தாக ஹச­ன­லிக்கும் நீங்கள் வாக்­க­ளித்­த­தாக சொல்­கி­றீர்கள்.

அப்­ப­டி­யாயின் அட்­டா­ளைச்­சே­னைக்கு எப்­போ­தா­வது தேசி­யப்­பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி வழங்கும் எண்ணம் உங்­க­ளுக்கு உள்­ளதா என்று கூறுங்கள். அதுவும் இல்­லாது விட்டால் அட்­டா­ளைச்­சே­னைக்கு வழங்க முடி­யாது என்றால், அதை­யா­வது வெளிப்­ப­டை­யாகக் கூறுங்கள். அந்த ஊர் மக்­க­ளிடம் நாங்கள் இது குறித்து பதி­ல­ளிக்க வேண்­டி­யுள்­ளது" என்று, மு.கா. தலை­வ­ரிடம் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் அன்சில் உயர்­பீ­டத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார்.

ஆனாலும், ஹக்கீம் இதற்கு எவ்வித பதிலையும் வழங்காமல் மௌனமாகவே இருந்துள்ளார்.
விடிவெள்ளி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -