100 அகதிகளுடன் லிபியாவில் கடலில் கவிழ்ந்த படகு- அனைவரும் பலியான சோகம்



சிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பலர் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். நிலப்பகுதி வழியாக செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

எனவே, தற்போது கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் சென்று நுழைவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்பவர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர்.

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் படகு ஒன்று மத்திய தரைக்கடலில் வந்து கொண்டிருந்தது. லிபியாவுக்கும், இத்தாலிக்கும் இடையே 50 கி.மீ. தூரத்தில் வந்த போது படகு கடலில் மூழ்கியது.

தகவல் அறிந்ததும் பிரான்ஸ் கடற்படை கப்பலும், 2 வர்த்தக கப்பல்களும், விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன.

இருந்தும் 4 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்தனர்.

எனவே 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.

இதற்கிடையே நேற்று முன்தினம் மத்திய தரைக் கடலில் படகுகளில் பயணம் செய்த 550 அகதிகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -