1000 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

அஷ்ரப் ஏ. சமத்-

ண்டனில் ்இயங்கும் தர்மநிதிய அமைப்பான Widow Orphanages needs UK organization கொழும்பில் இயங்கும் அல்-இசான் நம்பிக்கை நிதியத்துடன் இணைந்து இலங்கையில் உள்ள விதவைகள், மற்றும் குழந்தைகள், வறுமைக்கோட்டின் கீழ் வாழ் குடும்பங்களுக்கு கடந்த 3 வருட காலமாக உதவி வருகின்றது. 

நேற்று நாட்டின் பல பாகத்திலிருந்தும் தெரிபு செய்யப்பட்ட 1000 குடும்பங்களை கொழும்பு தெமட்டக்கொட அல்-ஹிஜ்ரா வித்தியாலயத்தில் வைத்து உலா் உணவுப் பொருட்கள் பகிா்ந்தளிக்கப்பட்டன. இவ் உணவுப் பொருட்கள் 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாத காலத்திற்கு சமைக்கக் கூடிய வகையில் அரிசி, பால்மா, பருப்பு சீனி, போன்ற உட்பட இப் பொதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ் வைபவத்தில் அல்-இசான் நிதியத்தின் தலைவா் கலாநிதி ஹரிஸ்டின், பணிப்பாளா் நிஸ்தாா் அனீஸ் மற்றும் தொண்டா்கள் இணைந்து இப் பொதிகளை வழங்கி வைத்தனா். இதே போன்று எதிா்வரும் 27ஆம் திகதி தெமட்டக்கொடையில் உள்ள பளத்த மத்தியஸ்தான்தில் சிங்கள, தமிழ் விதவைகள் 500 குடும்பங்களுக்கும் பகிா்ந்தளிக்கப்பட உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -