13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் தொடர்பில் எந்த பேச்சுவார்த்தையும் தேவையில்லை

எம்.எம்.ஜபீர்-

ங்களுடைய ஆட்சிக் காலத்தில் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கின்ற அல்லது குறைக்கின்ற எந்தவொரு விஷேட அபிவிருத்தி சட்ட மூலமும் கிழக்கு மாகாண சபையில் அனுமதிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை வழங்குகின்ற விடயத்தில் தெளிவாக இருக்கின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அழைப்பின் பேரில் நாவிதன்வெளி பிரதேசத்தில் பிந்தங்கிய கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வின் போது 12ஆம் கொளனி ஆலயடிச் சந்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.ஏ.நிஸார் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எஸ்.ராமக்குட்டி, பொது மக்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அதிகார பகிர்வு உச்சக் கட்டம் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்ற வேளையிலே இருக்கின்ற அதிகாரத்தை ஒரு போதும் நாங்கள் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. மாகாணத்திற்கு காணி அதிகாரம் வேண்டும் என குரல் கொடுத்து கொண்டிருக்குக்கின்றோம். காணி அதிகாரிகள் பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டிருக்கும் போது கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் அதனை துஸ்பிரயோகம் செய்கின்றார்கள். தமக்கு அதிகாரம் இருக்கின்றதென தாங்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் காணி திணைக்களத்தின் கீழுள்ள அதிகாரிகள் மாகாணத்தின் அதிகாரத்திற்குட்பட்டவர்கள்.

அரசியலமைப்பின் 13 திருத்தச் சட்டத்திலே காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை எடுக்கின்ற பொறுப்பு எங்களிற்கு இருக்கின்றது. அதனை பெறுவதற்கான பொறிமுறைகளை கலந்துரையாடி வருகின்றோம். பொலிஸ் அதிகாரம் கூட மாகாண சபைகளுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் ஏற்கனவே அரசியல் சாசனத்திலே இருக்கின்றதொரு விடயம் அதைப்பற்றி எந்த பேச்சுவார்த்தையும் தேவையில்லை. யாரும் கூடிக் கதைக்கவும் தேவையில்லை. கௌரவ ஜனாதிபதி அவர்களும் பிரதம மந்திரி அவர்களும் 24 செக்கன்களில் அமுல்படுத்துவதற்கு இந்த நாட்டிலே யாரிடமும் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே அவர்கள் அதனை உடனடியாக அமுல்படுத்திவிட்டு இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையை அவர்கள் தொடர முடியும். தொடர வேண்டும். அவ்வாறு தொடரும் பட்சத்தில் மாகாணத்தினுடைய ஆட்சி அதிகாரமுள்ள ஆட்சியாக சரியான முறையிலே மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்கின்ற ஆட்சியாக மாற்றமடையும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் நிதி ஒதுக்கீட்டில் மகளிர் அமைப்புகளுக்கு உபகரணம் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -