அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச்சென்ற இளைஞனுக்கும் அவருக்கு உதவி வழங்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் இம்மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (03) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ஷமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மொறவெவ, குணவர்தனபுர பகுதியைச்சேர்ந்த அமித் குமார (20வயது) மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான பீ.ஜினதாஷ (56வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த 12ம்மாதம் 13ம் திகதி 15 வயது சிறுமியை 20 வயதான இளைஞன் கடத்திச்சென்று பண்டாரவெல. எடம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வீடொன்றில் தங்கியிருந்த போது, சிறுமியைக் காணவில்லையென பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரனைகளை மேற்கொண்ட மொறவெவ பொலிஸார் 15 வயது சிறுமியையும் 20 வயது இளைஞனையும் கைது செய்தனர்.
இதேவேளை அதே இடத்தைச்சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான 56 வயதுடைய நபர் கடத்திச்சென்ற 15 வயது சிறுமியை வீட்டில் வைத்திருப்பதற்கு உதவி வழங்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தியதுடன் சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.