நிந்தவூரில் 17 குடியிருப்பு இல்லாத வீடுகளின் உரிமையாளர்களுக்கெதிராக வழக்கு..!

சுலைமான் றாபி-
நாட்டில் தற்பொழுது டெங்கு நோய் தீவிரமடையும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிக்கும் வேளை, இந்த நோயானது அம்பாறை மாவட்டத்தினை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இருந்த போதும் இம் மாவட்டத்தின் கல்முனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களிலேயே இந்நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதற்காக தொடர்ச்சியாக ஒரு மாதமாக பல்வேறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டு வந்திருந்தாலும் தொடர்ச்சியாக இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமாக காணப்படுகின்றது.

இவ்விடயம் சம்பந்தமாக நேற்றைய தினம் (08) நிந்தவூர் ஜூம்மாப் பள்ளிவாசலில் அதன் தலைவர் ஏ.அப்துல் ஹமீட் தலைமையில் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதில் சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் எம்.தெளபிக், சம்மாந்துறை நீதவான் மன்ற நீதிபதி முஹம்மட் பஷீல், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் ப்ரியலால், பதில் நீதவான் சட்டத்தரணி ஏ.எம்.நசீல், ஜூம்மா பள்ளிவாசல் செயலாளர் எம்.ஏ.எம். றசீன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், நிந்தவூர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விஷேட சந்திப்பில் போது டெங்கு நுளம்பினை தடுப்பதற்காக புகைகளை விசிருபவர்கள் வரும் போது பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கதவுகளை பூட்டி வைப்பதாகவும், அதிகமான நுளம்புகள் வீடுகளிலிருந்தே பெருகுவதாகவும், சில இடங்களில் மக்கள் குடியிருப்புக்கள் இல்லாத வீடுகள் மற்றும் கிணறுகள் காணப்படுவதாகவும் இங்கு கலந்து கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்த குழுவினர் அடையாளம் காணப்பட்ட மக்கள் குடியிருப்பு இல்லாத 17 வீடுகளின் உரிமையாளர்களுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிந்தவூர் ஜூம்மாப் பள்ளிவாசலில் தலைவர் ஏ. அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

இதேவேளை நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் வெற்று வளவுகளிலும், தங்கள் வீடுகளிலும் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சூழல் காணப்படுமாயின் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் டெங்கு நுளம்புகள் பெருகும் சூழல் காணப்படுமாயின் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் ஜூம்மாப் பள்ளிவாசலில் தலைவர் மேலும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -