சவளக்கடை றோயல் விளையாட்டு கழகத்தின் 18ஆவது ஆண்டு நிறைவு கிரிக்கட் சுற்றுப் போட்டி

எம்.எம்.ஜபீர்-
சாய்ந்தமருது கட்டாக்கோ வெல்டிங் சொப் நிறுவனத்தின் அனுசரணையில் சவளக்கடை 6ஆம் கொளனி றோயல் விளையாட்டு கழகத்தின் 18ஆவது ஆண்டு நிறைவு மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியியில் சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இச்சுற்றுப்போட்டி 7ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 9வீரர்கள் கொண்ட இறுதி சுற்றுக்கு அம்பாரை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கலிருந்து 48 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றி இறுதிசுற்றுக்கு சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகமும் சம்மாந்துறை அல்-ஹம்றா விளையாட்டுக் கழகமும் தெரிவானது.

நாணையச் சுழச்சியில் வெற்றிபெற்ற அல்-ஹம்றா விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 6.1 ஒவர் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 34 ஒட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய நியூ சன் விளையாட்டுக் கழகம் 6.1ஒவர் நிறைவில் 01 விக்கெட்களை இழந்து 35 ஒட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த எம்.ஐ.சாக்கீர் தொடர் ஆட்டநாயகனாகவும், போட்டியின் சிறந்த ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். 

இந்நிகழ்வு றோயல் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எச்.பௌசர் தலைமையில் 6ஆம் கொளனி அல்-தாஜூன் பாடசாலை மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கட்டாக்கோ வெல்டிங் சொப் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.எம்.வசீர், 6ஆம் கொளனி; ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் எம்.எச்.அபுவக்கர், அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.பைசாத், கிராம சேவக உத்தியோகத்தர் பீ.ரீ.ஐயூப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஜலீல், நாவிதன்வெளி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.அஸ்வர், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.மபாஸ், ஜூம்ஆப் பள்ளிவாசல் செயலாளர் எஸ்.ஐ.முபீன், விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர்களான எஸ்.எம்.ஜூனைதீன், யு.எல்.அமீர், வை.பாரிஸ் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

வெற்றிபெற்ற நியூ சன் விளையாட்டுக் கழகத்திற்கு எட்டாயிரம் ரூபாய் காசோலையும் வெற்றிக் கிண்ணமும் வீரர்களுக்கு பதக்கமும், இரண்டாம் இடத்தை பெற்ற அல்-ஹம்றா விளையாட்டுக் கழகத்திற்கு ஐயாயிரம் ரூபாய் காசோலையும் கிண்ணமும் வீரர்களுக்கு பதக்கமும் வழங்கிவைக்கப்பட்டது.

சாய்ந்தமருது கட்டாக்கோ வெல்டிங் சொப் நிறுவனத்தின் அணுசரணையில் றோயல் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீறுடை அறிமுகம் செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -