போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் பெறும் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் நிறைவடைந்து சட்டம் அமுலுக்கு வந்தவுடன், தராதரம் பார்க்காமல் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சட்டத்தை மதித்து வாகனம் செலுத்துபவர்களுக்கு எந்தவிதத்திலும் இந்த தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது எனவும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்கு வரத்துச் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் கேட்டுக் கொண்டார்.