பக்தாத்தில் கார் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 35 பேர் பலி.

ராக் தலைநகர் பக்தாதில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 35 பேர் பலியாகினர்.

இன்று (02) பக்தாதின் வடமேற்குப் பகுதியில் மக்கள் கூடியிருந்த இடத்தில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 35 பேர் பலியானதோடு, மேலும் 61 பேர் காயமடைந்துள்ளனர்.

பலியானவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. பக்தாதில் கடந்த வாரம் முதல் இடம்பெறும் இரண்டாவது பெரிய தாக்குதல் இது என்று தெரிவிக்கப்படுகிறது.

பக்தாதின் சந்தைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததோடு, 54 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில் ஐஎஸ் தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இழந்து வருவதால் பொதுமக்கள் பகுதிகளை மையமாகக் கொண்டு தாக்குதலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றிருந்த நிலையில், இத்தாக்குதலையும் ஐஎஸ் இயக்கம் நிகழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -