மூதூர் ஹதீப் நகர் பள்ளிக்கு ஜமாத் சென்ற மாணவர்களில் 3 பேர் கடலில் மூழ்கி பரிதாப மரணம் -படங்கள் இணைப்பு


யூ.ஆ.கீத் திருகோணமலை-

ம்பஹா மாவட்டம் திகாரியில் இருந்து இஸ்லாமியப்பணிக்காக மூதூருக்கு வந்திருந்த மாணவர்கள் ஏழுபேர் மூதூர் 7ஆம் வட்டாரம் ஹதீப் நகர் பள்ளிவாயலில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் இவர்களில் நான்குபேர் இன்று காலை பள்ளிவாயலின் பின்பக்கமாக இருக்கும் கடலில் குளிப்பதற்கு (தடைசெய்யப்பட்ட கடல் பகுதி)  சென்று அதில் மூவர் எம்.உகாஸ் (18), எம்.அப்துல்லாஹ் (16), எஸ்.அக்ரம் (19) ஆகிய மூவருமே கடலில் மூழ்கி பரிதாபமாக மரணித்துள்ளனர்.

ஒருமாணவன் அதிஷ்டவசமாக தப்பித்து அருகில் உள்ள மீனவர்களிடம் விபரத்தைக் கூறியதும் மீனவர்கள் உடனடியாக களத்தில் இறங்கி சடலங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மாணவர்களின் ஜனாஷாக்கள் மூதூர் வைத்தியசாலையில் இருப்பதுடன் இவர்கள் கடந்த வருடம் சாதாரணதரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் என்றும் குறுப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -