அமெரிக்கா மீண்டும் முதலிடமே பெறும் என்கிறார் 45வது அதிபர் ட்ரம்ப்






மெரிக்காவின் 45வது அதிபராக வெள்ளிக்கிழமை பதவியேற்ற ட்ரம்ப் அமெரிக்கா மீண்டும் முதலிடத்தில் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார். அதிபராக உறுதிமொழி எடுத்துக் கொண்ட ட்ரம்ப் 16 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய மைதானத்தில் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளின்டன் கலந்து கொண்டனர். ட்ரம்ப் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஹிலாரி கிளின்டன் உட்பட சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றனர்.



பதவி ஏற்பு விழாவில் ட்ரம்ப்புடன் ஒபாமா | படம்: ராய்ட்டர்ஸ்

ட்ரம்ப்பின் உரை:

"கடந்த நான்கு வருடங்களாக அற்புதமாக பணியாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் முன் நிறைய சவால்கள் உள்ளன. அமெரிக்க மக்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மீண்டும் அமெரிக்கவை பாதுகாப்பான நாடாகவும், வலிமைமிக்க செல்வமிக்க நாடாகவும் மாற்ற முடியும்.

அமெரிக்க படுகொலைகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இன்று முதல் புதிய பார்வை அரசாங்கத்திடம் உள்ளது. இனி அமெரிக்கா முதல் இடத்தில் இருக்க போகிறது.

இந்த நாள் உங்களுக்கான நாள், உங்கள் கொண்டாட்டத்துக்கான நாள். இனி, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு உரிய நாடாக இருக்க போகிறது.

நான் உங்களுக்காக எனது இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன். அமெரிக்க மக்களை கீழே விழ அனுமதிக்க மாட்டேன்.

அமெரிக்கா மீண்டும் அதன் வெற்றியை நோக்கி பயணிக்கப் போகிறது முன் இல்லாததை விட, நாம் இழந்த வேலை வாய்ப்புகளைத் திரும்பப் பெற போகிறோம். நாம் கனவுகளை மீண்டும் வெற்றிகரமாக மாற்றப் போகிறோம்.

பிற நாட்டினர் நம்மை பின் தொடருமாறு நாம் ஒளிரப் போகிறோம். ஒற்றுமையாக இருந்தால் அமெரிக்காவை யாரலும் தடுக்க முடியாது.

வெற்று பேச்சு இத்துடன் முடிவைந்துவிட்டது. இனி இதனை செயலில் காட்ட வேண்டும். உங்களால் முடியாது என்று யாரையும் சொல்ல அனுமதிக்காதீர்கள், அமெரிக்க மக்களின் போராட்ட குணங்களுக்கு மத்தியில் எந்த சவாலும் ஈடாகாது.

மீண்டும் அமெரிக்கா பாதுகாப்பான நாடாக மாறப் போகிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். நன்றி" என்று கூறினார்.

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்:

இதற்கிடையில், ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டனில் 200-க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் போரட்டம் நடத்தினர். ட்ரம்புக்கு எதிராக 'ட்ரம்ப் எங்கள் அதிபரல்ல' போன்ற முழுக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா கடந்த 2009-ல் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்றார். பின்னர் 2013-ல் 2-வது முறையாக ஒபாமா அதிபராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் முடிய இருந்ததையடுத்து, கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற்றது.

இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்பும் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே, ஹிலாரி வெற்றி பெறுவார் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதையெல்லாம் பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -