சாய்ந்தமருதில் 56 இளைஞர்கள் பிரித்தானிய ‘எடின் பார்க்' சர்வதேச விருதுக்கு தெரிவு.!

அஸ்லம் எஸ்.மௌலானா-
முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிஸானின் முயற்சியால் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 56 இளைஞர்கள் பிரித்தானிய ‘எடின் பார்க் சர்வதேச’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான விருது வழங்கும் விழா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரித்தானிய எடின் பார்க் குழுவினரின் பங்கேற்புடன் எதிர்வரும் மார்ச் மாதம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விருதானது இளைஞர்களின் ஆளுமை நுண்ணறிவு, வெளிக்கள ஆய்வு, தலைமைத்துவம், ஆற்றல், கல்வி, திறமை, விளையாட்டு மற்றும் சர்வதேச கல்வி தொடர்புகள் போன்றவற்றில் 03 வருட கால தேர்ச்சியினை அடைந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் 56 இளைஞர்கள் இந்த விருதினை பெறுவதற்காக சர்வதேச தரத்திலான பயிற்சி வகுப்புக்களை நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிஸான் கூறினார்.

குறிப்பாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன், முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்குப் பல்கலைக் கழக முகாமைத்துவ மற்றும் தகவல் தொழிநுட்பவியல் துறை தலைவர் எம்.பீ.எம்.இர்சாத் உட்பட மற்றும் பல கல்விமான்கள், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் எமக்கு வழங்கிய பங்களிப்பு மிகவும் அளப்பரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை டொக்டர் எம்.எஸ்.எம்.ஜிப்ரி, கல்முனை மின்சார சபை பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், முன்னாள் சாரணிய மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, தென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்விப் பிரிவு பதில் பணிப்பாளர் ஐ.எம்.கதாபி, சாய்ந்தமருது இளைஞர் தொழில் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.லத்தீப், சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, அம்பாரை தாதி மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் எம்.சி.எம்.கமறுல் றிழா, தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் ஐ.எம்.றசீன், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ. பகுர்த்தீன், கல்முனை சாஹிறாக் கல்லூரி சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர், சிரேஸ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானா, கல்முனை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சபான், கிழக்கு பல்கலைக் கழக உத்தியோகத்தர் ஏ.சி.றியாஸ், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் எம்.சி.எம்.சம்சுல் முனா, முன்னாள் சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.எம்.அன்வர், இளைஞர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.எம்.றியாத், பெமிலி சொய்ஸ் உரிமையாளர் ஹனீபா நௌபர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எம்.முபாறக் அலி, டிஜிடல் ஹவுஸ் உரிமையாளர் எம்.எம்.நௌபர், சாய்ந்தமருது வர்த்தக சமூக தலைவர் எம்.சி.எம்.அஸீம் ஆகியோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சாய்நதமருது இளைஞர்கள் சார்பாக நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்று முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதி அமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -