68 ஆண்டாக இலவச சிகிச்சை அளித்து வரும் 91 வயது பெண் டாக்டருக்கு பத்மஸ்ரீ விருது

புதுடெல்லி: சிறந்த சேவை புரியும் குடிமக்களுக்கான பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் 91 வயது பெண் டாக்டர் பக்தி யாதவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர். இவர் அங்கு ஆஸ்பத்திரி நடத்தி 68 ஆண்டுகளாக இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளார். தற்போது 91 வயதாகும் நிலையிலும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் வந்து இலவச சிகிச்சையை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அவரது சேவையை பாராட்டி அவரை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த விருதை அளித்துள்ளது. இதன் மூலம் பத்மஸ்ரீவிருது பெறும் முதல் பெண் டாக்டர் என்ற பெருமையையும் பெறுகிறார்.மாலைமலர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -