"7 அமைச்சர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள்"

அமைச்சரவையிலுள்ள 7 அமைச்சர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தெரிவித்துள்ள மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உபாலி கொடிகார, அவர்களது இந்தப் பொல்லாத குற்றங்களை ஒழித்து வைத்துக்கொள்வதற்காக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு உதவ எத்தணிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். 

ஒன்றிணைந்த எதிரணியின், மாகாண சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதொன்றாக மாற்றுவதை விடுத்து, நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கானத் தீர்வுகளைக் காணவேண்டும் என, பல விடயங்கள் இருக்கின்றன. ஓரினச்சேர்க்கை பற்றி ​கதைப்பதை விட, மிகப் பாரிய பிரச்சினைகள் நாட்டில் நிலவுகின்றன. ஆனால், அமைச்சரவை அமைச்சர்களுக்கு, இது குறித்து பேசுவதே முக்கியமாகி விட்டது. 

இந்தவிவகாரம், மற்றைய கலாசாரமான சமூதாயத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஒரு சாதாரண பிரஜைக்காக, இந்த அரசாங்கம் எதனைச் செய்துவிட்டது. இது தற்போது ​தேவைப்படும் பிரச்சினையா?”என்று, இதன்போது அவர் கேள்வியெழுப்பினார்.  

ஜி.எஸ்.பி வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக, ஓரினச்சேர்க்கை​க்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்குதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டுமா? என்றும் அவர் வினவினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -