மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக பாடுபட்டோம் - பொதுபல சேனா

பொதுபல சேனா அமைப்பு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக பாடுபட்டதாக அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தன்னை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே டிலாந்த விதானகே இதனை கூறியுள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, பொதுபல சேனா மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தன்னை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்ததாக கூறியிருந்தார்.

பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி திட்டமிட்டு அந்த மக்களை தன்னிடம் இருந்து பிரித்ததாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள டிலாந்த விதானகே, முன்னாள் ஜனாதிபதியின் வெற்றிக்காக தமது அமைப்பு செயற்பட்டதாக அறிவித்துள்ளார்.இந்த வரலாற்றை முன்னாள் ஜனாதிபதியுடன் தொடர்புள்ள அனைவரும் அறிவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி தற்போது அவரை சுற்றியுள்ளவர்கள் கூறுவதை கேட்டு இப்படியான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இது குறித்து நாங்கள் கவலையடைகின்றோம்.

மேலும் பொதுபல சேனா ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. எமது அமைப்பு இவர்கள் எவருடைய அமைப்பும் கிடையாது என டிலாந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -