ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் புதிய ஆரம்பப் பாடசாலை உருவாக்கம்..!

எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினூடாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள காத்தான்குடி தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் முதலாம் தரத்திற்கான புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு 2017.01.11 ஆந்திகதி - புதன்கிழமை தாருஸ்ஸலாம் பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் முனீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டதோடு பாடசாலை ஆசிரியர், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் அதிக மாணவர்கள் சுமை காரணமாக புதிய மாணவர்களை சேர்ப்பதிலுள்ள சிரமம் மற்றும் மாணவர்கள் தூர இடங்களுக்கு சென்று கல்வி கற்பதால் ஏற்படும் அசௌகரியங்கள் என்பவற்றை தவிர்க்கும் நோக்கில் மக்களின் வேண்டுகோளிற்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முழு முயற்சியினால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையானது காத்தான்குடி தீன் வீதியிலுள்ள பகுதி ஒன்றில் இவ்வருடம் தொடக்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இப்பாடசாலைக்கான நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்படும் வரை தற்போது இப்பாடசாலையானது அப்பிரதேசத்திலுள்ள தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -