இப்படியும் ஒரு பாடசாலையா.. அரசியல்வாதிகளே.. தனவந்தர்களே.. உங்கள் சேவைகள் எங்கே



து என்ன குடிசை என்று நினைக்கிறீர்களா…? இதுவும் ஒரு பாடசாலை தான். வேறு எங்குமல்ல. திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ள “குச்சவெளி இளந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயம்” என்னும் பெயரையுடைய ஒரு முஸ்லிம் ஆரம்பப்பாடசாலையே இது. அந்தப்பாடசாலையிலுள்ள இரண்டே இரண்டு கட்டடங்கள் தான் இவை. எமது பிள்ளைகளைப்போன்ற 90க்கும் அதிகமான பச்சிளம் சிறுவர்கள் கல்வி கற்கும் ஓர் பள்ளிக்கூடம்.

பல அரசியல் அதிகாரம் கொண்ட தலைவர்களைத் தங்கள் தலையில் தூக்கி வைத்து ஊர்வலம் செல்ல மட்டுமே முடிந்த பலரது கண்கள் இதனைக் காண குருடாகி விட்டன. எம்மால் முடிந்தால், எம் மனதால் முயற்சி செய்தால் ஓலைக்கொட்டில்களில் கற்கும் இந்தப் பச்சிளம் குழந்தைகளை ஓர் சிறந்த பள்ளியறையில் பயில வைக்க முடியும். இருந்தும் நாம் இதனைச் சிந்திப்போமா? இன்று கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்து வரும் கிழக்கு மாகாண சபை இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? 

திருமலை மாவட்டத்தின் துடிப்புள்ள மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களே..இதுவும் உங்களின் பணிகளில் ஒன்று தானே.. மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமைகளே..ஏன் இன்னும் இந்த பச்சிளம் பாலகர்கள் இவ்வளவு கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டும்? சிந்தியுங்கள்… திருமலை மாவட்ட அரசியல் தலைமைகளே, கிழக்கு மாகாண முதலமைச்சரே, மாகாண சபை அமைச்சர்களே, உறுப்பினர்களே, பிரதேச அரசியல் தலைமைகளே….இது உங்களின் கவனத்திற்கு..

நன்றி: கல்குடாநேஷன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -