முஸ்­லிம்கள் காடு­களை அழிக்­க­வில்லை : மஹிந்த அழித்தார் - ராஜித சேனா­ரத்ன

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மத்­த­ளை­யிலும் ஹம்­பாந்­தோட்­டை­யிலும் பாரி­ய­ளவில் காடு­களை அழித்த போது அமை­தி­யாக இருந்­த­வர்கள் முஸ்­லிம்கள் வில்­பத்­துவில் மீள் குடி­யேறு­வதை எதிர்க்­கி­றார்கள். இது மனி­தா­பி­மா­ன­மற்ற செய­லாகும். அவர்கள் காடு­களை அழிக்­க­வில்லை. தாங்கள் காணி­க­ளையே துப்­ப­ரவு செய்­துள்­ளார்கள் என சுகா­தாரம் போசனை மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 

அரச தொலைக்­காட்சி சேவையில் ஒளி­ப­ரப்­பா­கிய நிகழ்ச்­சி­யொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் வில்­பத்து மீள் குடி­யேற்றம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், 

1990ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் 24 மணி நேர அறி­வித்­தலில் முஸ்­லிம்­களை வெளி­யேற்­றி­னார்கள். முஸ்லிம் பெண்­களின் காது­களில் இருந்த தோடு­க­ளையும், கழுத்­தி­லி­ருந்த மாலை­க­ளையும் பறித்துக் கொண்டே விரட்­டி­னார்கள். வடக்கில் கோடீஸ்­வ­ர­ராக இருந்த முஸ்­லிம்கள் வெற்றுக் கைக­ளுடன் அக­தி­க­ளாக வெளி­யே­றி­னார்கள்.

இன்று வில்­பத்து விவ­கா­ரத்தில் குற்றம் சுமத்­தப்­படும் அமைச்சர் ரிசாட் பதி­யு­தீனும் வடக்­கி­லி­ருந்து அக­தி­யாக வந்து புத்­த­ளத்தில் அகதி முகாமில் குடி­யே­றினார். உண­வுக்­காக வெற்றுப் பீங்­கா­னுடன் பாணுக்­கா­கவும், தேங்காய் சம்­ப­ளுக்­கா­கவும் வரி­சையில் நின்றார் அவர். அமைச்சர் ரிசாத்­துடன் அக­தி­மு­காமில் வாழ்ந்­த­வர்கள் இன்று அவ­ரி­டமே உதவி கோரு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு உத­வு­வது அவ­ரது கட­மை­யாகும். அத­னா­லேயே வடக்கு மக்­களின் மீள் குடி­யேற்ற விவ­கா­ரத்தில் ரிசாட் பதி­யுதீன் உத­வி­களை செய்­கிறார். முஸ்­லிம்கள் வில்­பத்து வன சர­ணா­ல­யத்தில் மீள் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை.

கர­ணா­ல­யத்­துக்கு அப்பால் அவர்­க­ளு­டைய பூர்­வீக காணி­களிலேயே மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள். 

இக் குடி­யேற்­றத்தை காடு அழிப்­பா­கவும், வில்­பத்து ஆக்­கி­ர­மிப்­பா­கவும் இனவாதமாகவும் பார்ப்பது தவறானதாகும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதும் மீள் குடியேற்றுவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -