அரசியல்,போராட்ட வரலாறுகளில் கிழக்கினை உள்வாங்காத தீர்வை எதிர்பார்க்க முடியாது.!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
மிழ் மக்கள் பேரவையின் கிழக்கிற்கான இணை தலைமையினை பற்றி பேசுகின்ற பொழுது தமிழர்களினுடைய அரசியல் வரலாறாக இருந்தாலும் சரி அல்லது போராட்ட வரலாறாக இருந்தாலும் சரி கிழக்கு மாகாணம் இல்லாத தீர்வினை எடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தமிழ் மக்கள் பேரவை மட்டக்களப்பில் இம் மாதம் 21ம் திகதி சனிக்கிழமை நடாத்தவுள்ள எழுக தமிழ் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் அதிகப்படியான செல்வாக்கினை பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்.. தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளில் கிழக்கு மாகாணமானது முதன்மை படுத்தப்பட்டுள்ளது. அதற்காகத்தான் கிழக்கினை மையப்படுத்தியும், கிழக்குமாகாண மக்களின் அபிலாசைகள் உள் வாங்கப்பட்டதினாலுமே தமிழ் மக்கள் பேரவையானது இணை தலைமையினை கிழக்கிற்கும் கொடுத்துள்ளது. அதனாலே தமிழர்களினுடைய அரசியல் மற்றும் போராட்ட வரலாறுகளில் கிழக்குமாகாண மக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்படாத தீர்வினை எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாது என ஆணித்தரமாக தெரிவித்தார்.

இன்று 14.01.2017 மட்டக்களப்பு பல நோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற குறித்த எழுக தமிழ் நிகழ்சி சம்பந்தமாக தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவர் வசந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம், பேரவையின் செயற்குழு உறுப்பினர் சோமசுந்தரம், தமிழ் தேசிய முன்னணியின் சார்பாக சுரேஸ், தமிழ் பேரவையின் இணைப்பாளர் விஜேகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் ஏரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்ச்சியானது எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை மட்ட்டக்களப்பு மாநகர சபைக்குள் இருக்கின்ற பாட்டாளி மைதானத்தில் காலை நேரத்தில் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் மட்டக்களப்பு ஊரணியிலிருந்து ஒரு பேரணியும், கல்லடி பாலத்திற்கு அப்பால் இருந்து ஒரு பேரணியுமாக இரண்டு பேரணிகள் குறித்த நிகழ்வு இடம் பெறுகின்ற மைதானத்தினை நோக்கி நடை பவணியாக வரவுள்ளதாகவும் தெரிவித்த அதே வேலையில் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் பேரவியினை பிரதி நிதித்துவப்படுத்தி அதன் தலைமைகளும் உரையாற்றவுள்ளதாக தெளிவுபடுத்தினர்.

அதன் அடிப்படையில் சகல தமிழ் பேசும் மக்கள், அவர்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற சிவில் அமைப்புக்கள், அரச, தனியார் நிருவாக உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாக அறிவித்த தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிவிப்பினதும், ஊடகவியலாளர் மாநாட்டில் இடம் பெற்ற கருத்துக்கள் மற்றும் கேற்கப்பட்ட கேள்விகளுக்கான விரிவான பதில்களுடனான காணொளி இங்கே எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -