தேசிய போட்டியில் கல்முனை பாலிகா மாணவி பாத்திமா ஷைரீன் சாதனை!

காரைதீவு நிருபர் சகா-
கொழும்பு இஸ்பத்தனா கல்லூரியினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட மீலாத் விழா ஆங்கில மொழி பேச்சுப் போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் மௌலானா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை (17) தெஹிவல டீ.எஸ்.ஜெயசிங்க மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இம்மாணவி, சான்றிதழ் வழங்கப்பட்டு, தங்கப் பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கல்வி அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் என்பன இணைந்து நடத்திய ஆங்கில மொழி மூல பேச்சுப் போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தையும் இவர் பெற்றிருந்தார்.

அதேவேளை கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 167 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ள இம்மாணவி, பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் முதலிடம், இரண்டாமிடம் பெற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளார்.

இவர் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா- அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -