வவுனியாவில் காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடிவிற்காக இளைஞர்கள் அமைதிப் பேரணி.!(படங்கள் இணைப்பு)

வுனியாவில் இளைஞர்களால் காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடிவிற்கான இறுதித் தீர்மானத்தை நல்லாட்சி அரசு வெளியிட வேண்டும் என்று இளைஞர்கள் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து இன்று(27/01/2016) மாலை 4.00 மணியளவில் அமைதிப்பேரணியினை ஆரம்பித்து வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரத திடலின் முன்றலில் நிறைவு பெற்றது.

இளைஞர்களின் இன்றைய அமைதி பேரணியில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்க இருந்த நிலையில், உண்ணாவிரத போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்த்தன அவர்களின் வருகை மற்றும் அவர் வழங்கிய உறுதிமொழியையடுத்து நிறுத்திக் கொள்ளப்பட்டது.

இளைஞர்களின் மகஜரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

"முப்பது வருடகால அகிம்சைப்போர், முப்பது வருடகால ஆயுதப்போர் அதனைத்தொடர்ந்து மகிந்த அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறையென இந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான எமது உறவுகள் காணாமலும், அரசியல் கைதிகளாகவும் மாறி மாறி வந்த அரசுகளின் தலைமையில் அரங்கேறியுள்ளது.

நல்லாட்சி அரசின் இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததும் தேசிய கட்சிகள் இணைந்து நடைபெறும் ஆட்சியில், தமிழர்களினால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராமுகத்துடன் செயற்படுவது இளைஞர்கள் ஆகிய எமக்கு மன வேதனையும், அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.

எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் எமது விடுதலைக்காக இளம் வயதில் தமது உணர்வுகளை இனத்தின் விடிவுக்கான பாதையில் பயணித்த எமது முதல் தலைமுறையினை இழந்து தவிக்கும் ஓர் இனத்தின் அடுத்த தலைமுறை இளைஞர்களாகிய நாங்கள், எமது உறவுகளின் உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக இங்கு ஒன்று கூடினோம்.

இளைஞர்கள் ஆகிய நாங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள தங்களிடம் முன் வைக்கும் நிபந்தனைகள்

1- காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசு விரைவான தீர்வினை தர வேண்டும்.

2- தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

3- பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்கப்படல் வேண்டும்.

யுத்தத்தால் கைது செய்யப்பட்ட/ காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளைத் தேடி எமது உறவுகள் மேற்கொள்ளும் அடையாள உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக நாமும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியது எமது தலையாய கடமை.

எனவே எமது கோரிக்கைகளுக்கு நால்லாட்சி அரசு ஓர் தீர்வினை வழங்க வேண்டும் என இளைஞர்கள் சார்பாக கோரி நிற்கின்றோம்"

நன்றி- என வவுனியா மாவட்ட இளைஞர்கள் தமது ஜனாதிபதிக்கான மகஜரில் குறிப்பிட்டிருந்தார்கள்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -