அரசாங்கத்தை விட்டு செல்ல போவதில்லை - றிசாத் பதியுத்தீன்

வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் சம்பந்தமாக ஜனாதிபதி அண்மையில் மேற்கொண்ட தீர்மானமானது போரில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு குடியேற்றுவதில் எந்த தடையையும் ஏற்படுத்தாது என அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். வில்பத்து வன விலங்குகள் சரணாலயத்தை விரிவுபடுத்தி சரணாலயத்தை மீண்டும் வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி அண்மையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

வில்பத்து வனப்பகுதியில் எவரையும் குடியமர்த்தவோ எதிர்காலத்தில் குடியேற்றவோ எண்ணவில்லை என அமைச்சர் றிசாத் பதியூதீன் கூறியுள்ளார்.

போர்க்காலத்தில் வில்பத்துவுக்கு அருகில் இருக்கும் பிரதேசத்தில் வாழ்ந்து, பேரினால் இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் அங்கு மீள்குடியேற்றும் போது சிலர் பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்ததால், அந்த இடங்கள் காடாக மாறியிருந்ததாகவும் மக்கள் முன்னர் வாழ்ந்த பகுதியிலேயே குடியேற்றப்படுவதாகவும் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து சரணாலயம் தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்தினாலும் அரசாங்கத்தை விட்டு செல்ல போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

த.வி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -