”சேர்த்துக் கொள்ளவும்” வை.எல்.எஸ். ஹமீட்



YLS ஹமீட், றிஷாட்
பதிலாக்கம் ( பதிவு 1)
டந்த ஒரு வாரமாக றிசாட் எனக்கெதிராக பல்வேறு பெயர்களிலும் வேறு வழிகளிலும் எனக்கெதிராக தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்ற விமர்சனங்களுக்கு பதில் வழங்குவதாக கூறியிருந்தேன். அவற்றிற்குள் நேரடியாக செல்லமுன் சில பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகின்ற அதேவேளை சமூகத்தின் நடுநிலையார்களிடம் சில கேள்விகளைத் தொடுக்க விரும்புகிறேன்.

1) அண்மைக் காலமாக போலி முகநூல்களிலும் வட்ஸ்அப்களிலும் என்னை அவமானப் படுத்துகின்ற எத்தனை பதிவுகளை றிசாட் வெளியிட்டிருக்கின்றார்? இன்னும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்? என்று உங்களுக்குத் தெரியுமா?

2) பொறுமையின் எல்லையில் அவற்றில் ஒன்றிரண்டிற்காவது மனிதன் என்ற முறையில் பதிலளிக்க முற்படும்போது என்னை நோக்கி யாராவது விரல் நீட்டுவது பொருத்தமானது; என நினைக்கின்றீர்களா?

3) அந்த விரல் என்னை நோக்கி நீட்டப்பட முதல் அவரை நோக்கி நீட்டப்பட வேண்டும்; என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

4) தனது பெயரில் அவை எழுதப்படவில்லை என்கின்ற ஒரே காரணத்திற்காக அவை யாராலோ எழுதப்பட்டவை, என நீங்கள் நம்புகிறீர்களா?

5) உங்களை ஒருவர் தொடர்ந்து அவமானப் படுத்தினால் நீங்கள் எப்போதுமே மௌனமாக இருப்பீர்களா?

6) முதல் தாக்குதல் தொடுத்தவன் சுத்தவாளி, அதற்கு பதிலளிக்க நிர்ப்பந்திக்கப் படுபவன் குற்றவாளி, என்கின்ற புதியவிதி எங்காவது பிறந்திருக்கின்றதா?

7) அரசியல் வாதிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களா?

8) அரசியல் ரீதியாக றிசாட் விமர்சிக்கப் பட்டால் அவற்றிற்கு அரசியல் ரீதியாக பதிலளிக்காமல் தன் அடியாள்களை வைத்து சம்பந்தப்பட்டவரை தனிப்பட்ட ரீதியில் அசிங்கமாக அவமானப் படுத்துவதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

9)' நான் யாரையும் விமர்சிப்பேன் ஆனால் என்னை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவ்வாறு யாராவது விமர்சித்தால் அதற்கென நான் வைத்திருக்கும் ஊடக அடியாட்களை வைத்து அவர்களின் மானம், மரியாதை அனைத்தையும் பறித்து விடுவேன்'; என்கின்ற அவரது நிலைப்பாட்டை அங்கீகரிக்கின்றீர்களா?

என்னை நோக்கி தொடுக்கப்படுகின்ற சில கேள்விகள்

1) நீங்கள் றிசாட்டை விமர்சிப்பதற்கு காரணம் தேசியப்பட்டியல் பிரச்சினையா?
2) உங்கள் விமர்சனங்கள் அவரோடு இருந்தபோது ஏன் செய்யப்பட வில்லை.
3) அவர் வன்னி மக்களுக்காக தனியாகப் போராடும்போது அவரை விமர்சிப்பது முறையா?
4) உங்கள் விமர்சனங்கள் ஒரு காபிரின் தொலைக்காட்சியில் போய் செய்தது சரிதானா?
5) இனவாதியான ரங்காவுடன் நீங்கள் கைகோர்த்தது சரியா?
6) றிசாட்டை, அவரது குடும்பத்தை விமர்சித்தது சரியா?

இந்தக் கேள்விகளை எழுப்புவதும் அவர்தான், தனது அடியாட்களின் ஊடாக

பதில்
தேசியப்பட்டியல் தொடர்பாக நான் ஒரு முழுமையான ஆக்கத்தை வெளியிட இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் அவற்றின் ஊடாக முதல் இரு கேள்விகளுக்கும் தெளிவான பதிலைத் தருகின்றேன். இப்பொழுது மின்னல் நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்ட மூன்றாவது கேள்வியில் இருந்து எனது பதிலை ஆரம்பிக்கின்றேன்.

மூன்றாவது கேள்வி, வன்னி மக்களுக்காக தனியாக போராடுகின்ற றிசாட்டை விமர்சிப்பது சரியா?
பதில்: வன்னி மக்களுக்காக றிசாட் போராடுகின்றார், என்பது எவ்வளவு தூரம் சரியானது. அவ்வாறு போராடுகின்ற சக்திவாய்ந்த ஒரு அமைச்சரால் யுத்தம் நிறைவடைந்து ஆண்டுகள் ஏழு கடந்தும் பாதி மீள்குடியேற்றம் கூட இன்னும் நிறைவடைய செய்ய முடியவில்லை என்றால் அது எவ்வகையான போராட்டம், வெறும் முகநூல் போராட்டமா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, முசலி மக்கள் ( மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி...... போன்ற பிரதேசங்கள் ) வன்னியின் ஓர்அங்கம் இல்லையா? அந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட பிரச்சினை இருந்தும் அதனைத் தீர்த்து வைக்க அவர் செய்த போராட்டம் என்ன? ஊடகங்களுக்கு அறிக்கை, தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவைகளா?

பூர்வீகமாக வாழ்ந்த காணியை அரசாங்கக் காணியாக மாற்றிய வர்த்தமானி அம்மக்களுக்காக போராடுகின்ற அமைச்சருக்கு மூன்று ஆண்டுகள் தெரியவில்லையென்றால் வர்த்தமானி ஒரு ரகசிய ஆவணமா? பரவாயில்லை . தெரியவந்ததிலிருந்து ஆண்டு இரண்டுகள் கழிந்து விட்டன. அந்த வர்த்தமானியை ரத்துச் செய்ய அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? இதை நான் மின்னலில் சொன்னது குற்றமாம். அப்படியானால் ஊடகங்களில் கதைத்ததைத் தவிர எடுத்த நடவடிக்கை என்ன? அதனைக் கூறிவிட்டு வை எல் எஸ் ஹமீட்டிற்கெதிராக அறிக்கை விடுங்கள்.

ஊடகங்களில் பேசுவதுதான் போராட்டமா?ஊடகங்களில் பேசவேண்டிய நேரங்களில் பேசவேண்டும்; என்பது வேறு. ஒரு heart patient ஐ heart specialist இடம் கொண்டு செல்லாமல் ஐம்பது தடவைகள் சாதாரண MBBS டாக்டரிடம் கொண்டு போய்விட்டு நோயாளியின் நோய் மோசமான கட்டத்தை அடைகின்ற நேரத்திலாவது heart specialist இடம் கொண்டு செல்லாமல் வேண்டுமென்று MBBS டாக்டரிடம் கொண்டுபோவதும் , பாருங்கள் இந்த நோயாளிக்காக இவர் எவ்வளவு கஷ்டப்படுகின்றார் என்று கூலிக்கு ஆள் வைத்து சொல்ல வைப்பதும் சரியா?ஏன் heart specialist இடம் கொண்டு போகவில்லை என்று கேட்ட வை எல் எஸ் இற்கு இரவு பகலாக இணையத் தளங்களிலும் தனது தரங்கெட்ட அடியாட்களை வைத்து முகநூல் களிலும் பொய்களையும் அவதூறுகளையும் கூறி அசிங்கமாக எழுதுவதன் மூலம் முசலி மக்களின் பிரச்சினை தீரும்; என்று நினைக்கின்றீர்களா?

எனக்கெதிராக ஏழு நாட்களாக எத்தனையோ பேர்களில் பெயர்களில் அறிக்கை விடுகின்ற நீங்கள் ஒரு அறிக்கையிலாவது இந்த வர்த்தமானி தொடர்பாக இன்று வரை ஜனாதிபதி, பிரதமரிடம் பேசவில்லை; என்பதற்கு நியாயம் சொன்னீர்களா? " ரிசாட் பதியுத்தீன் போராடுகிறார், போராடுகிறார், எப்படிப் போராடுகிறார், ஊடக அறிக்கையூடாக போராடுகிறார். மஹிந்தவின் ஆட்சியில் இருந்து இன்றுவரை ஊடகத்தினூடாகத்தான் போராடுகின்றீர்கள். தீர்வு கிடைத்ததா? ஆனால் உங்களுக்கு விளம்பரம் கிடைத்தது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதி ஆட்சிமுறையை விரும்புகின்றனர்.
ஏன், அதனூடாக எதையாவது சாதிப்பதற்கு வாய்ப்பு இருப்பதனால். குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் காலம் அவ்வாறான சாதனையை செய்வதற்கு மிகவும் பொருத்தமான காலம். அதைப் பயன்படுத்தித்தான் மறைந்த தலைவர் வெட்டுப்புள்ளித் திட்டத்தைக் குறைத்தார். இல்லையென்றால் இன்று சிறுபான்மை அரசியலுக்கே இடம் இருந்திருக்காது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது உங்களுக்கு வர்த்தமானி பற்றித் தெரியவில்லை; என்று வைத்துக் கொள்வோம். மறிச்சுக்கட்டி ( முசலி) மக்களுக்கெதிராக இனவாதிகள் கடந்த ஆட்சியிலேயே பிரச்சினை கிளப்பியது உங்களுக்கு தெரியும்தானே. ஆகக்குறைந்தது அந்த மக்களின் பிரச்சினைகளை அன்றைய ஜனாதிபதி வேட்பாளரிடம் கூறி சில பொதுவான வசனங்களைப் போட்டாவது ஒரு ஒப்பந்தத்தை செய்தீர்களா? ஒப்பந்தம் செய்யச் சொன்ன என்னுடன் சண்டை பிடித்தீர்கள்.

நீங்கள் இதயசுத்தியுடன் மீள்குடியேற்றம் முடிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? கூறுங்கள் .

கடந்த காலத்தை விடுவோம். இம்முறை என்ன நடந்தது. வில்பத்தை விஸ்தரிக்க வேண்டும்; என்று ஜனாதிபதி கூறினார். அவர் மனதில் எதைவைத்து அவ்வாறு கூறினார்; என்று கூறவில்லை. இருப்பினும் மறிச்சுக்கட்டி பிரதேசத்தை மனதில் வைத்துத்தான் அவ்வாறு பேசினார்; என்பது பொதுவான ஊகம். காரணம் அந்த வர்த்மானி. நீங்கள் அந்த மக்களுக்காக இதய சுத்தியுடன் போராடுகின்ற ஒருவர் என்றால் முதலில் ஜனாதிபதியிடம் அது முஸ்லிம்களுடைய காணி என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக்கொண்டு போய் பேசினீர்களா? அல்லது பிரதமரிடம் பேசினீர்களா? ஏன் பேசவில்லை. கடந்தகாலங்களில் பேசவில்லை, விடுவோம். அம்மக்களில் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் இம்முறையாவது ஏன் பேசவில்லை . காரணம் கூறுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள். பல நாள் பட்டினி கிடந்தவன் புரியாணியைக் கண்டால் எப்படி பாய்ந்துபோய் அதனை எடுப்பானோ அதே போல் ஜனாதிபதியின் செய்தி வந்ததுதான் தாமதம் ' ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவேன், ஜெனீவாவுக்குப் போவேன்' என்று அறிக்கை விட ஏங்கிக்கிடந்தவன்போல் சூடான அறிக்கை விட்டீர்கள். அண்மைக்காலமாக வன்னியில், குறிப்பாக முசலியில் உங்கள் ஆதரவுத்தளத்தில் பாரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் உங்கள் முகநூல்களில் உங்களை வீரன், தீரன் என்று கூறுவதை வெளிமாவட்ட மக்களில் சிலர் நம்பினாலும் உங்களது நடவடிக்கைகளை நேரடியாக தெரிந்த முசலியில் இன்று இளைஞர்கள் அமைப்புகளை ஏற்படுத்தி உங்களை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் உங்களது ஆதரவுத் தளத்தை மீண்டும் சரி செய்வதற்கு உங்களுக்கு இவ்வாறான ஊடக விளம்பரங்கள் அவசியமாகின்றது. அதை வை எல் எஸ் ஹமீட் கெடுத்துவிட்டாரே, வடைபோச்சே, என்கின்ற ஆத்திரம் உங்களுக்கு. 

இன்று சூழலியலாளர்கள் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தி இருக்கின்றார்கள். அதில் இரண்டு பிரதான விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஒன்று, அங்கு முஸ்லிம்கள் குடியிருக்கவில்லை. இரண்டு, அரச காணிகளில் காடுகளை அழித்தது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்; என்று கூறியிருக்கின்றார்கள். நீங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து அந்த வர்த்தமானியை ரத்து செய்ய வைத்திருந்தால் இன்று இவர்கள் கூட்டம் போட்டிருக்க முடியுமா? தனியார் காணி தொடர்பாக அவர்கள் எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும். அதுமட்டுமின்றி இன்றைய பத்திரிக்கையாளர் மாநாட்டிற்கு ஒரு வெளிநாட்டு NGO அநுசரணை வழங்கி இருப்பதாக அறிய முடிகிறது. அவ்வாறாயின் இந்த முசலிப்பிரச்சினைக்குப் பின்னால் ஒரு சர்வதேச பின்னணி இருக்கின்றதா? அது மஹிந்த அணியிர்க்கு உதவுவதற்காகவா? அல்லது வடகிழக்குக்கு இணைப்பிற்கு உதவுவதற்காகவா ? வெளிநாட்டு சக்தியின் நோக்கம் எதுவாக இருந்த போதும் அதனால் பாதிக்கப்படப் போவது முசலி மக்கள்தான்.

எனவே உங்கள் ஆதாயத்திற்காக முசலி மக்களின் வர்த்தமானி பிரச்சினையைத் இழுத்தடித்ததன் விளைவு எங்கே போய் இருக்கின்றது; பார்த்தீர்களா?

அம்மக்களின் பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் தீர்வைப்
பெற்றுக் கொடுக்காமல் விட்டது மட்டுமல்லாமல் இம்முறையும் அதை பேசவேண்டிய இடத்தில் பேசாமல் ஊடகங்களில் பேசிவிட்டு உங்களை ஹீரோவாக காட்ட முயற்சிக்கின்றீர்களே, உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?

ஒரு முஸ்லிம் ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும், 
முடியாவிட்டால் வாயால் தடுக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் மௌனமாக இருக்கவேண்டும். எனவே நீங்கள் இம்முறையும் அம்மக்களை ஏமாற்றுவதற்கெதிராக நான் குரல் கொடுத்தது குற்றமா?

எனவே வன்னி மக்களுக்காக றிசாட் தனியாக போராடுகின்றார்; என்பது சரியா? முசலி மக்களை இம்முறையும் றிசாட் ஏமாற்றிவிடக் கூடாது; என்பதற்காக வை எல் எஸ் ஹமீட் குரல் கொடுத்தது தப்பா? பொதுமக்களே நீதிபதிகளாக இருங்கள் .

(தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -