குளறுபடியாகும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள்..!

கிழக்குமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடகாலபகுதியை எடுத்து நோக்கின் பல குளறுபடிகள் கொண்ட நியமங்களாகவே காணக்கிடைக்கின்றது. அவை பட்டதாரி ஆட்சேர்ப்பு முறைகளில் பாரபட்சம் காட்டுவதனையும் பல்வேறு கால சூழ்னிலைகளில் பலவிதமான வகையில் ஆசிரிய நியமனங்களையும் வழங்கிவருவதனையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் ஆங்கில ஆசிரியர் நியமனங்களை தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பட்டதாரிகளுக்கு ஆங்கில மொழியில் பட்டத்தைத்தொடர்ந்ததால் ஆங்கில ஆசிரியர் நியமனங்களை வழங்கியிருந்தது. (குறித்தபட்டதாரிகள் சிலர் விண்ணப்பம் கோரியதற்கமைவாக பல்கலைக்கல்வி நெறியை உரிய தினத்துக்குள் பூர்த்தி செய்திருக்கவில்லை)ஆங்கில நியமனங்களுக்காக நுண்ணறிவும் பொது அறிவும் பரீட்சிக்கப்பட்டது.

2013 ம் ஆண்டு சகல பட்டதாரிகளுக்கும் போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு 2013/05/08 அன்று நியமனங்கள் வழங்கப்பட்டது. அதே போன்று அதே ஆண்டு நவம்பர் காலப்பகுதியில் எந்தவித போட்டிப் பரீட்சையும் இன்றி நேர்முகத்தேர்வின் மூலம் பல நியமனங்கள் வழங்கப்பட்டன. இதில் கணிதவிஞ்ஞானப் பட்டதாரிகளை வட்டாவைத்து அழைத்து நியமனம் வழங்கியமை சிறப்பமாகும்.

மேலும் அதே ஆண்டு வழங்கப்பட்ட தகவல் தொழினுட்ப நியமனங்கள் நேர்முகத்தேர்வு மூலம் கலைத்துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டமை வேடிக்கையான செயற்பாடாகும். பின்னர் 2014 ஜனவரி காலப்பகுதியில் மேலும் கணித விஞ்ஞான ஆசிரியர் நியமனம் ஏதோவொரு அடிப்படையில் இடம்பெற்றது.

2015 காலப்பகுதில் ஆங்காங்கே நேர்முகத்தேர்வுமூலம் ஆங்கில கணிதவிஞ்ஞான பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்பட்டதாக ஊகிக்கவும் முடிகிறது.

2016 ல் மீண்டும் பாடரீதியான ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சையை கிழக்குமாகாணக் கல்வி அமைச்சு அறிவித்திருந்தமை மற்றும் கலைத்துறைப்பட்டதாரிகளை மாத்திரம் தொடர்ந்தும் போட்டிப்பரீட்சை ஒன்றின் மூலம் தோற்றி தகுதியை நிரூபிக்கக் கோருகின்றமை விசனம் ஊட்டும் செயலாகும். பாடரீதியாக நேர்முகத்தேர்வொன்றின்மூலம் நியமனம் செய்யக்கூடிய வழிமுறை இருந்தும் போட்டிப்பரீட்சை சுமையை பட்டதாரிகள் மீது திணிப்பது ஆரோக்யமாகத் தெரியவில்லை. அதே வேளை இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிபீடப் பட்டதாரிகள் தொடர்பில் கவனம் கொள்ளாமை விசர் கொள்ள வைக்கிறது.

மேலும் இத்தேர்வுகளில் குறித்த ஏற்கனவே வேலையில் உள்ள சில பட்டதாரிகள் மீண்டும் மீண்டும் தோற்றி ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்பினைப் பெற்றும் தூர இடங்களில் இருந்தால் கிட்ட உள்ள இடங்களில் வேலைவாய்பினைப் பெறுவதற்காக தோற்றுவதும் சித்தியெய்துவதுமாகவும் உள்ளது.

ஆகவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுவரும் அளவுக்கு கலைத்துறைப் பட்டதாரிகள் கவனயீர்ப்புடன் செயற்பட்டு மற்றைய கணித விஞ்ஞான ஆங்கில தகவல் தொழினுட்பபட்டதாரிகளுக்கு நேர்முகத்தேர்வொன்றின் மூலம் வழங்கப் பட்டது போன்று தமக்கான நியமனங்களையும் நேர்முகத்தேர்வொன்றின் ஊடாக கேட்டுப்பெறுவது முறையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -