வாக்குறுதிகளை கொடுத்து மீறுபவன் முனாபிக் ஆவான் - ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி-
திகமாக நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் உலகளாவிய ரீதியில் எதனை செய்தாலும் அதற்குரிய பிரதிபலன்கள் உலகில் மாத்திரம்தான் கிடைக்குமாக இருந்தால் என்னைப்பொறுத்த மட்டில் அவ்வாறான விடயங்களை செய்யமால் இருப்பது சிறந்ததாகும். அதேபோன்று மறுமை வாழ்வுக்காக நாங்கள் பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள், எமது ஊருக்காகவும் சமூகத்திற்காகவும் உழைக்கக்கூடிய சமூக தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிட்கு நாங்கள் செய்கின்ற உதவிகளுக்குரிய நன்மைகள் எங்களுடைய மறுமை வாழ்வில் கிடைத்துக்கொண்டிருக்கும் அந்த ஒரேயொரு நோக்கத்திற்காக மாத்திரம்தான் இவ்வாறன விடயங்களை மேற்கொண்டு வருகின்றோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒயொதிக்கீட்டிலிருந்து மீராவோடை றிழ்வான் பள்ளிவாயலுக்கு 50,000 ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களை கையளிக்கும் நிகழ்வு 2017.01.07ஆந்திகதி - சனிக்கிழமை றிழ்வான் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் இவ்வாறான நிகழ்வுகளில் நேரடியாக நாங்கள் கலந்துகொள்கின்றபோது பலவிதமான தேவைப்பாடுகளை இனங்கானக்கூடிய வாய்ப்புக்கள் எங்களுக்கு கிடைக்கின்றது. அதிலும் குறிப்பாக இவ்வாறான பள்ளிவாயல்களுக்கு எங்களால் இயலுமான உதவிகளை செய்கின்றபோது மறுமை வாழ்வில் எங்களுக்குரிய நன்மைகள் கிடைக்க வேண்டுமென்ற ஓரேயொரு எண்ணத்திலாகும்.

எங்களால் இயலுமான விடயங்களுக்கு மாத்திரம்தான் நாங்கள் வாக்குறுதிகளை வழங்க வேண்டும். வாக்குறுதிகளை கொடுத்து மீறுபவன் நயவஞ்சகன் (முனாபிக்) ஆவான். அல்லாஹ் வாக்குறுதியை மீறுபவனுக்கு தண்டனையாக அல்குர்ஆனில் கூறும்போது நரகத்தின் கீழ்ப் பாகத்தில்தான் அவன் இருப்பான் என்று சொல்லி காட்டுகின்றான். அந்த வகையில் என்னிடம் இப்பள்ளிவாயலினால் இன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக ஜெனரேட்டர் (மின் பிறப்பாக்கி) இன்ஷாஅல்லாஹ் 2017ஆம் ஆண்டிலும் மாகாண சபையின் அதிகாரம் இருக்குமாக இருந்தால் என்னுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து அதனை பெற்றுத்தருவதோடு மேலும் இப்பள்ளிவாயலின் கட்டுமானப் பணிகளுக்காக என்னால் இயலுமான ஒரு விடயத்தினை செய்யவேண்டும் என்றதொரு எண்ணத்தில் 25 சீமெந்து பக்கட்களை எனது சொந்த நிதியிலிருந்தும் பெற்றுத்தருகின்றேன்.

இந்நாட்டில் சிறுபான்மைச் சமூகமாக வாழும் நாங்கள் கடந்த கால அரசாங்கத்தினால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்தெதிராக ஓர் நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கி இருக்கின்றோம். அதிலும் எம்சமூகத்துன்மீது கரிசனை காட்டாத அரசாங்கமாகவே இந்த அரசாங்கமும் இருக்கின்றது. கடந்தகால அரசாங்கத்தில் கூட நடைபெறாத சில அநீதிகள் எம்முஸ்லிம் சமூகத்திற்கு இந்த அரசாங்கத்தில் நடைபெறுகின்றது. நாங்கள் ஓர் நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு பாடுபட்ட அத்தனை விடயங்களும் வீனடிக்கப்பட்டு விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

அல்லாஹ் மிகவும் தெளிவாக சொல்லிருக்கின்றான் நீங்கள் எதிலே நலவுள்ளது என்று நினைக்கின்றீர்களோ அதிலே நீங்கள் அறியாத கெடுதிகள் இருக்கும். நீங்கள் எதிலே கெடுதிகள் இருக்கும் என்று நினைக்கின்றீர்களோ அதிலே நீங்கள் அறியாத நன்மைகள் இருக்கும் என அல்குர்ஆனில் கூறுகின்றான். இதனை நாங்கள் இன்று நம் கண்ணூடாக காண்கின்றோம். இந்த ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்களுக்கு விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கை கூடுதலாக இருந்தபோதும் அவ்வாறான நிலைமை எமக்கு கிடைக்கவில்லை. இதனை நாங்கள் அல்லாஹ்வின் ஒரு சோதனையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

வெறுமெனே அரசியலை மாத்திரம் நோக்காக கொண்டு அடுத்துவரும் தேர்தலிலும் தான் வெற்றிபெற வேண்டுமென்ற எண்ணத்தோடு செயற்படுபவர்களாக நாங்கள் இருந்து விடக்கூடாது. என தனதரையில் தெரிவித்தார். இந்நிகழ்வில் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவரும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், றிழ்வான் பள்ளிவாயலின் தலைவர், செயலாளர் உட்பட நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -