பொது பல சேனாவை அடக்க முடியாமல் போனதற்கான காரணம் இதுதான் - மஹிந்த

பொதுபல சேனாவின் ஞானசாரவின் இனவாதத்துக்காக அவரை கைது செய்யும் படி விமல் வீரவங்ச என்னிடம் கூறிய போது சம்பிக்க ரணவக்கவே அவரை கைது செய்யக்கூடாது என விடாப்பிடியாக நின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பு வாசஸ்தலத்தில் இடம் பெற்ற உலமா கட்சி தலைமையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத சிறு கட்சிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். தங்களது ஆட்சிக்காலத்தில் பொது பல சேனாவை அடக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன.? என உலமா கட்சியின் செயலாளர் மௌலவி அஸ்ஹர் பாக்கவியின் கேள்விக்கு பதிலளிக்கையில் மேலும் அவர் தெரிவித்ததாவது,

மோடி இனவாதி என்ற காரணத்தை காட்டி அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்தது. ஆனாலும் ஞானசார முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்ட நிலையிலும் அமெரிக்கா அவருக்கு ஒரு மாத காலம் விசா வழங்கியதிலிருந்தே எமது ஆட்சியில் இனவாதம் வளர யார் காரணம் என்பதை நீங்கள் புரியலாம். அத்துடன் அவருக்கு நோர்வே பணம் கொடுத்தது பற்றி த லீடர் பத்திரிகை விலா வாரியாக எழுதியுள்ளது.

நேர்வே, மற்றும் அமெரிக்காவின் பணத்தை பெற்றுக்கொண்டு எம்மை முஸ்லிம்களிடமிருந்து தூரமாக்கி எனது ஆட்சியை கவிழ்க்க அவர் மேற்கொண்ட முயற்சியாகவே அவர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் ஹலால் பிரச்சினையை தூக்கினார். அவரது இன வாத பேச்சுக்களுக்காக அவரை உடனடியாக கைது சய்ய வேண்டும் என விமல் வீர வன்ச என்னிடம் அமைச்சரவையில் வைத்து கூறினார். ஆனால் சம்பிக்க ரணவக்க அதனை கடுமையாக எதிர்த்தார். அவருடன் இணைந்து ராஜித சேனாரத்னவும் எதிர்த்தார். இவர்கள் என்னை வீழ்த்துவதற்காகவே இவ்வாறு செய்துள்ளனர் என்பதை என்னால் புரிய முடியாமல் போனது கவலையான விடயம்தான்.

இப்போது பலருக்கும் உண்மை விளங்கி விட்டது. ஞானசார தான் இருக்க வேண்டிய இடத்தில் இந்த அரசாங்கத்துடன் இப்போது இருந்து கொண்டிருக்கிறார். அவருக்கு பக்க பலமாக சம்பிக்க, ராஜித போன்றோர் இருக்கின்றனர். முஸ்லிம்கள் இந்த உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுருத்த பொல்கம்பொல மௌலவி முபாறக் அப்துல் மஜீத், ஜயந்த குலதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -